Logo


English

இரண்டாவது மண்டலமாகிய

திருவலங்கற்றிரட்டு

இரண்டாங்கண்டம்

கண்டம் என்றால் கூறுபாடு எனப் பொருள்.
காண்டம் என்பது கூட்டம் என்க.
ஆக, இரண்டும் வெவ்வேறு பொருள் பயக்கத்தக்கன.

இவ்விரண்டாங் கண்டத்தில் அடங்கியுள்ள பாடல்கள் இயற்றமிழாயுள்ளன.  இவ்விரண்டாங் கண்டத்தின் பெருமையைப் பற்றிச் சுவாமிகள் கூறியுள்ளது, காசியாத்திரை எனும் மூன்றாவது மண்டலத்தில் உள்ள நூலிலிருக்கும் ஒரு பாடல் மூலமாக உணரலாம்.  அதாவது!

பாடல்:

யாப்பி னிலக்கணமும் யாந்த விலக்கியமும்
யாப்பொலிபல் சித்திரமு நச்சியல்போய் – மூப்போ
தலங்கற் றிரட்டினிரண் டாங்கண்டம் பாருன்
விலங்கைத் தறித்து விடும்.

இந்நூலில் உள்ளவைகளை உள்ளுவார் உயர்வார்.  ஈகை, ஈடு, பெறுவார்.  கவிதைப் புலமை வேண்டுநர், இக்கண்டத்தில் அமைந்துள்ள பாடல்களில் தமது கண்ணையும் கருத்தையும் செலுத்திச் செம்மை யடைவர். 

திருவனந்தபுரத்திலுள்ள ஓரன்பர் வீட்டின் மேல் மாடியில் சுவாமிகள் தங்கியிருந்து, குகனருளால் இருபத்தி இரண்டு நாட்களில் யாப்பிலக்கணம் தாமே பயின்றனர்.  வெள்ளியியல், ஆசிரியவியல், கலியியல், வஞ்சியல், எனும் நான்கு பிரிவுகள் கொண்டது இந்நூல்.  இதைப் பல் சந்தப் பரிளம் என்று சுவாமிகள் மனமகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.  யாப்பிலக்கண, இலக்கியங்களில் எழும் ஐயமெல்லாம் நீங்க விளக்கமளிக்கப்பட்ட நூல் இதுவாகும்.  ஆசிரியவியல் 139ம் பாடலில், ஸ்ரீ சுப்பிரமணிய சடக்கரமும் பொருளும், சடக்கரத்தில் நவாக்கரமும் தசாக்கரமும் கூறியும், அவற்றுள் எதனையேனும் செபிக்குமளவும், உரிய பயனும் விளக்கப்பட்டுள்ளன.

2வது ஆசிரியவியல் 151ம் பாடலில் சமாதி நிலைகளைப் பற்றி விளக்கியுள்ளார்கள்.  துறவிகளின் உணவு நியமம், மானதபூசை முறைமை, பூசை புரிகாலங்கள், விராதி விசேட நாட்கள், அனைத்தும் இப்பகுதியில் விளக்கப்பட்டுள்ளன.  உலக போகங்களை நச்சுபவர்களே மூர்த்தி வழிபாடு விரும்புவர்.  இன்னவர்கட்கு ஞானானந்த நூல் கழறுநிலை கைவராது என்று கூறியுள்ளார்கள்.  இறைவனைப் பாடும் மகிழ்ச்சி மிக்குற்ற பின்னர்த்தான் அவனன்பினால் எனக்குப் பொன்னும் பெருமையும் உற்றனவென்று பாடுகிறார்.  சுவாமிகளின் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் சிலவும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.  இந்நூலில் நான்காரைச் சக்கரம், இரத பந்தம், நாற்கூற்றிறிருக்கைச் சித்திரம், சதுரங்க பந்தம், துவிதநாகபத்தம்.  நான்காரைச் சக்கரம், சருப்பதோ பத்திரம், கோமூத்திரி, போன்றவை அடங்கியுள்ளன!

இந்நூலின் இறுதிப் பகுதியாக வஞ்சியியல், வாயுறை, வாழ்த்து மருட்பா எனும் வெண்பா முதலும் ஆசிரியம் ஈறுமாற வரும் பாடலில், சுவாமிகள், காசினியீரை நோக்கி, உடலும் உலக போக போக்கியங்களின் நிலையாமை பற்றிக் கூறி, காலன் வருங்கால் உமக்கு உய்தி வேண்டின், சேய்ப்பரமன் சேவடியே தஞ்சம் என இருந்து சுவாமிகளின் போதனைப்படி நடந்து உய்தி பெற உபதேசிக்கிறார்கள். 

திருவலங்கற்றிரட்டு இரண்டாங் கண்டத்தில் அமைந்துள்ள பதிகங்கள், பாவினங்கள், மற்றும் பாடல்களின் எண்ணிக்கை போன்ற விபரமடங்கிய அட்டவணை கீழே அமைந்துள்ளது.

இரண்டாவது மண்டலமாகிய
திருவலங்கற்றிரட்டு
இரண்டாங்கண்டம் அட்டவனண

பதிக வரிசை எண்

பதிகம்

பாவினம்

பாடல் எண்

I

வெள்ளியல்

 1. நேரிசை வெண்பா
 2. இன்னிசை வெண்பா
 3. பஃறொடை வெண்பா
 4. சவலை வெண்பா
 5. சிந்தியல் வெண்பா
 6. குறள் வெண்பா

122

வெண்பாவினம்

 1. 1) தாழிசை
 2. 2) துறை
 3. 3) வெளிவிருத்தம்

II

ஆசிரியவியல்

 1. நேரிசையாசிரியப்பா
 2. இணைக்குறளாசிரியப்பா
 3. அடிமறிமண்டிலவாசிரியப்பா
 4. நிலைமண்டிலவாசிரியப்பா

 

 

ஆசிரியப்பாவினம்

 1. ஆசிரியத் தாழிசை
 2. ஆசிரியத் துறை
 3. ஆசிரிய விருத்தம்
 4. எழுசீர்க்கழிநெடிலடியான் வருவன
 5. ஒன்பதின் சீர்க்கழிநெடிலடியான் வருவன
 6. பதின்சீர்க்கழிநெடிலடியான் வருவன
 7. பதினொருசீர்க்கழிநெடிலடியான் வருவன
 8. பன்னிருசீர்க்கழிநெடிலடியான் வருவன
 9. பதின்மூன்று சீர்க்கழிநெடிலடியான் வருவது
 10. பதினான்கு சீர்க்கழிநெடிலடியான் வருவன
 11. பதினைந்து சீக்கழிநெடிலடியான் வருவன
 12. பதினாறு சீர்க்கழிநெடிலடியான் வருவன

 

 

 

 

 

 

 

III

கலியில்

1. நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா

 

 

1. ஒத்தாழிசைக்கலி

2. அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா
3. வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா

 

 

2. வெண்கலி

1. பதினாறடி வெண்கலிப்பா
2. கலிவெண்பா
3. தரவுகொச்சகச் கலிப்பா
4. சுரிதகத்தரவு கொச்சகக்கலிப்பா
5. சுரிதகத்தரவிணைக் கொச்சகக்கலிப்பா
6. இயற்றரவிணைக் கொச்சகக் கலிப்பா
7. சிஃறழிசைக் கொச்சகக் கலிப்பா
8. பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா
9. மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா
10. கட்டளைக் கலிப்பா

 

 

3. கலிப்பாவினம்

 1. கலித்தாழிசை
 2. கலிநிலைத் துறை
 3. கட்டளைக் கலித்துறை
 4. கலிவிருத்தம்

 

IV

வஞ்சியில்

1.  குறளடி வஞ்சிப்பா

 1. சிந்தடி வஞ்சிப்பா

84

 1. வஞ்சிப்பா

வஞ்சிப்பாவினம்

 1. வஞ்சித்தாழிசை
 2. வஞ்சித்துறை
 3. பாடக மடக்கு
 4. வஞ்சி விருத்தம்
 5. அந்தாதித் தொடை நான்காரைச் சக்கரம்
 6. ஒற்றிலாச் சுழிகுளம்
 7. மாத்திரை வருத்தனம்
 8. அக்கரவருத்தனம்
 9. மாத்திரைச் சுருக்கம்
 10. அக்கரச்சுதகம்
 11. சருப்பதோ பத்திரம் (மாலை மாற்று)
 12. வினாவுத்தரம்
 13. கூடசதுக்கம்
 14. காதைகரப்பு
 15. அந்தாதி மடக்கு
 16. அந்தாதித் தொடைத் தமருக பந்தம்
 17. பகர விகற்ப மடக்கு
 18. ஏகபாதம்
 19. கோமூத்திரி
 20. ஒற்றிலா இதழ் குவிப்பாட்டு

V

வாயுறை வாழ்த்து மருட்பா

 

1

 

 

ஆக முதற்கண்டம்          601
இரண்டாங்கண்டம்    532
---
ஆக இரண்டாவது மண்டலம் 1135
===

 


Home    |    Top