/0 ::: PAMBAN SWAMIGAL :::

Logo


English

நான்காவது மண்டலம்

ஒன்பது சிறு நூல்களை இணைத்து வரும் 1014 பாக்களைக் கொண்ட தொகுப்பே இந்நான்காவது மண்டலமாகும்.  அவை பின் வருமாறு:-

சிறுநூற்றிரட்டு:-

இந்நூல் வடிவில் சிறியது.  ஆயினும், இஃது பத்து மணியான மந்திர மறை பொதிந்தவை களாகும்.  இதில் உள்ள பாடல்கள் இறை பிரீதிக்கு உற்றவைகள்.  பாடிய காலம் 1891 – 1907 கல்மனதையும் கரைக்க வல்ல கவிகள் 258 கொண்ட நூல் இஃது. 

 1. சண்முக கவசம்
 2. பரிபூஜனபஞ்சாமிர்த வண்ணம்
 3. திருத்தொடையல்
 4. கந்தரொலியலந்தாதி
 5. குகப்பிரம வருட்பத்து
 6. ஞான வாக்கியம்
 7. கந்தகோட்ட மும்மணிக் கோவை
 8. வடதிருமுல்லை வாயிற்குகபரர் வண்ணம்
 9. நவவீரர் நவரத்தின கலிவிருத்தம்
 10. அட்டாட்ட விக்ரக லீலை

சேந்தன் செந்தமிழ்:-

இந்நூலில் சுவாமிகள் 5400 சொற்களைச் சான்று கூறி வடமொழித் திரிவும், அழிவும், தென்மொழி வழக்கும், ஒலியளவாக, வடமொழிக்கும், தமிழ் மொழிக்கும், உள்ள பொதுமையையும், பல சொற்கள் வடமொழிச் சொற்கள் என வழக்கில் வந்தவை வடமொழிச் சொற்கள் அல்ல எனவும் நிறுவியுள்ளார்கள். 

தவத்திரு பாம்பன் சுவாமிகள், ஒருநெறியான மனத்துடன், உண்மை உணர்ந்து வாழ்ந்து வந்த அறவோர்.  ஆன்ற புலமையினர், அரிய தவப்பயன் எய்திய மெய்யுணர்வாளர்.  நுண்மாண் நுழைபுலக் கருத்துக்கள் பல அமைந்த நூலும் உரையும் உள்ள அமைப்பு இது வரையில் தமிழ் மொழி வரலாற்றில் இல்லையெனலாம்.  தமிழ் என்ற சொல்லே தமிளம், திரமிடம், திராவிடம் எனத் திரிந்து வடமொழியில் புகுந்து வழங்கியது.

இந்நூலுக்குச் சுவாமிகளே வரைந்துள்ள முன்னுரையை நோக்குவார்க்குச் சுவாமிகளின் உள்ளக் கிடக்கை ஓரளவு உணர முடியும்.  அதாவது “50 செய்யுட்கள் வெண்பாக்கள், வடசொற் புகாத தமிழ் சொற்களால் இயற்றப்பட்டவை.  வடமொழியும் தமிழ் மொழியும், தனித் தனி மொழிகள்.  இவை ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றியதன்று.  இருமொழிகளும் தனித்தனியே இயங்கக் கூடியவை.  இம்மொழிகளில், உயர்வு, தாழ்வு, கூறுதல் கூடாது.  இவ்விருமொழிகளும் நம் சொந்த மொழிகளே, இவை நம் இரு கண்கள் போன்றவை.  இவைகளில் ஒரு மொழிப் பயன் அறிந்தவர் ஒரு கண் பார்வை மட்டுமே பெற்றவர் போல்வர்”

பத்துப் பிரபந்தம்:-

சுருதி, யுக்தி, அனுபவம் மற்றும் இறையருள் அனைத்தும் ஒருங்கே பாலிக்கப் பெற்ற சுவாமிகளால் கீழ்க்கண்ட பத்துப் பிரபந்தங்கள் அடங்கிய சித்திர விசித்திர விசேட கவிகள் 30 கொண்ட இந்நூல் பாடிய காலம் கி.பி. 1907 எனவாம்.

 1. சஸ்திர பந்தம்
 2. மயூரபந்தம்
 3. கமலபந்தம்
 4. பிறிதுபடு துவிதபங்கி
 5. பிறிதுபடு திரிபங்கி
 6. பிறிதுபடு பாட்டுப் பிரபந்தம்
 7. ஐந்தந்தாதி என்னும் பகுபடுபங்சகம்
 8. சஷ்டி வகுப்பு
 9. தங்க ஆனந்தக் களிப்பு
 10. அனவரதபாராயணாஷ்டகம்

குமரவேள் பதிற்றுப் பத்தந்தாதி:-

சென்னை, வைத்தியநாத முதலியார் தெருவில் உள்ள ஓர் வீட்டின் மேன் மாடத்தின் சுவாமிகள் ஏழு திங்கள் காறும் தனியே மெளன நிலையில் இருந்து கொண்டு, விதேக முத்தி விரும்பிப் பெரும் புரிவோடு நிட்டை சாதித்து வருஞான்று, தமக்குற்ற அனுபவங்களைக் கல்லும் உருகும்படிக் கரைந்த வாக்காய் அமைந்த 100 பாடல்கள் கொண்டது இப்பகுதி.

மெய்யறிவுள்ளோர் எல்லாம் இறை அருளால் பிறவிப் பிணியை அகற்றித் திருவடி சேர்ந்ததைப் போலத் தமக்கும் அப்பேறு அருள இப்பாடல்களில் வேண்டுகிறார்.  “வினையை அழித்து ஆட்கொள்ளும் குருமணியே உனைப்பரம் என ஏற்காதார் எனக்குப் பகைவர் ஆவர்; உன்னையன்றி வேறுயாரையும் நலன் வேண்டி நின்றதில்லையே, என் வாட்டம் தீர்ப்பாயாக, மந்திரம், மருந்து, மாயசித்து, இழி உலோகத்தைப் பொன்னாக்குவேன்; குறி சொல்வேன்; செத்தவரை உயிர் பெற்றெழச் செய்வேன்; கடவுளைக் காட்டுவேன் எனக் கூறிப் பிழைப்பு நடத்த என் மனம் இசையவில்லையே! என்னை ஆண்டு கொள்வது உன் பரங்காண் நின் திருவடியே தஞ்சம்” எனக் கசிந்துருகிப் பாடிய பாடல்கள் இவைகள்.

சுவாமிகளே சில காலம் காலை மாலை நித்திய பாராயணத்தில் இப்பாடல்களை ஓதிவரும்படி அடியவர்களைப் பணித்தார்கள்.  இப்பாடல்களை ஓதும் அடியவர்கட்கு இகபர செளபாக்கியம் கிட்டும் என்பது சரதம்.

 1. குமாரஸ்தவம்
 2. செக்கர் வேள் செம்மாப்பு
 3. செக்கர்வேள் இறுமாப்பு
 4. சீவயாதனா வியாசம்
 5. திருத்தலங்களில் பாடிய கட்டளைக் கலித்துறை

இந்த நான்காம் மண்டலத்தில் அடங்கிய பாவினப் பட்டியலாகும்

பதிகம்

பாவினங்கள்

பாடல்கள்

I. சிறு நூற்றிரட்டு
1. சண்முக கவசம்


2.பரிபூஜனபஞ்சாமிர்த வண்ணம்

3. திருத்தொடையல்


4. கந்தரொலியலந்தாதி

 

 

5. குகப்பிரம வருட்பத்து


6. ஞான வாக்கியம்

7.கந்தகோட்ட மும்மணிக்      கோவை

 

 

8.வடதிருமுல்லை  வாயிற்குகபரர் வண்ணம்

9.

10. அட்டாட்ட விக்ரக லீலை

11. நவகணர் தோற்றம்

12. சண்முக நாமாவளி


அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

வண்ணங்கள்


அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

நேரிசை வெண்பா
நிலைமண்டிலயகவற்பா
இணைக்குறளகவற்பா
கட்டளைக்கலித்துறை

பன்னிருசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

குறள்வெண்செந்துறை

நேரிசையகவற்பா
நேரிசை வெண்பா
கட்டளைக்கலித்துறை
நிலைமண்டிலவகற்பா
இணைக்குறளகவற்பா

வண்ணம்
ராகம் புள்னாகவராளி

கலிவிருத்தம்

 

நாற்பதெண்சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

 

30

5

 

30

 

 

 

10

111

30

 

 

1

 

9

 

1

II. சேந்தன் செந்தமிழ்

நேரிசைவெண்பா

50

III. பத்து பிரந்தம்

 1. சஸ்திர பந்தம்
 2. மயூர பந்தம்
 3. பிறிதுபடு துவிதபங்கி
 4. பிறிதுபடு திரிபங்கி
 5. பிறிதுபடு பாட்டுப் பிரபந்தம்
 6. ஐந்தந்தாதி என்னும் பகுபடுபங்கசகம்
 7. சஷ்டி வகுப்பு
 8. தங்க ஆனந்தக் களிப்பு  ஒலி
 9. அனவரத பாராயணாஷ்டகம்  ஒலி

நேரிசை வெண்பா மற்றும் பல பாக்கள்

 

IV. குமரவேள் பதிற்றுப்பத்தந்தாதி

எண்கீர்கழி நெடிலடியாசிரியவிருத்தம் மற்றும் பல விருத்தம்

100

V. குமாரஸ்தவம்

 

44

VI. செக்கர்வேள் செம்மாப்பு

   முதலாங்காண்டம்

   இரண்டாங்காண்டம்
கனவதிகாரம்

 

அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

 

140

 58

VII. செக்கர்வேள் இறுமாப்பு

வெண்பா

 64

VIII. சீவயாதனாவியாசம்

நேரிசைச் சிந்தியல் வெண்பா கலிவிருத்தம் மற்றும் பல விருத்தம்

230

IX. திருத்தலதரிசன காலங்களில் பாடியது

கட்டளைக் கலித்துறை

35

 

ஆக மொத்தம்

1014


Home    |    Top