சித்தாந்த செல்வர், அருநூற்புலமை ஆன்றோர் பேராசிரியர் டாக்டர் ப. இராமன், அவர்களின் வழிகாட்டுதல் பெயரில் இப் பாடல் என்னைப் போல் எளியவர் படிப்பதற்கு ஏற்றவாறு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரித்து கொடுப்பது எளிய முறையில் கற்றுக் கொள்ளுவதற்கு மட்டும் தான் பயன்படுத்தப்பட வேண்டும். இத்துடன் இப்பாடல்களின் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.
1
உலக ஆசைகள் எல்லாம் கெடுதல் என்று? நீங்காத அன்பு உண்டாதற்கேற்ற தொண்டால் உனது இரு திருவடிகளைத் தரிசித்தல் என்பது என்று? ஓடும் மனம் அசையாதபடி நிற்பது என்று? எங்கும் உனது அன்பனாக இயங்குதல் என்று? ஒப்பில்லாத சிவானந்த வெள்ளமே! உண்மையான பரம்பொருளே! பெரிய கவலையை அழிக்கும் செருக்கை அளித்து ஆளும் எம் கடவுளே! கந்தமாதனத்தில் எழுந்தருளிய மூர்த்தியே!
நாசி நா விழி காது உடல் ஐந்தையும்2
கடவுளே! கந்தமாதனத்தில் எழுந்தருளிய மூர்த்தியே! மூக்கு, வாய், கண், செவி, மெய் என்னும் ஐம்பொறிகளையும் உலகத்தை நாடுவதிலிருந்து தடை செய்தாலும், ஆசையினால் உள்ளே உழலும் பேய் மனம் அரை நொடிப் பொழுதேனும் அடங்குமோ? குருவின் தயவு ஒன்று இருக்குமானால், அது நன்கு அடங்கித் துணையாகும் அல்லால் காசிக்குச் சென்று துறவு பூண்டவர்க்கும் அம்மனம் பகையாவிருக்கும்!
பாவிற்று உண்பவர் போல நில்லாமல் உன்3
கடவுளே! கந்தமாதனத்தில் எழுந்தருளிய மூர்த்தியே! மனிதரைப் பாடிப் பொருள் பெற்றுப் பிழைப்பவரைப் போல் இல்லாமல், உன் திருவடியையே புகழ்ந்து பாடும் ஒருவனாகிய நான், உன்னை அடைவதற்குரிய செய்திஎல்லாம் கூறும் வேத நூல்கள் பலவற்றைக் கூற, என் உயிர்க்கு நிகரான சிறந்த முனியாண்டியாப் பிள்ளையைப் பிரிந்து இவ்வாறு வருந்தித் திரியும்படியானேன்!
வாள் தடங்கண் மங்கையர் அல்குலாம்4
அழகிய வட்டமான தனங்களுடைய வள்ளியம்மைக்கும் தெய்வயானை அம்மைக்கும் கிடைத்துள்ள நல்ல கணவனே! ஒளி பொருந்திய பெரிய கண்களுடைய மாதரின் அல்குலாகிய மண்டபத்தில் தங்கும் கரிய மன்மதவேள் முகம் வாடி எனக்கு அஞ்சுவது என்று? எங்கும் அலையும் மனம் இல்லாது, உள்முகப் பார்வையில் நிற்குமொரு விருப்பமாகி, ஆதாரமற்ற சிதாகாசத்திலே நான் என்னும் அகங்காரம் ஒழிந்து பிழைப்பது என்று?
காவியங்கண் இளம்பிடியார்களின்5
கருங்குவளை மலர் போலும் கருங்கண்ணுடைய இளமையான பெண் யானை போன்ற மாதரின் மீது நான் கொண்ட காம விருப்பம் எல்லாம், இங்கு பச்சை நாவியாகி, என் சிறந்த அருள் ஆகிய மங்கைமீது விருப்பம் கொண்டு, இன்பம் அனுபவிப்பதற்கு என்று அருள்புரிவாய் என அழைத்துத் துதிக்க விதித்த தேவர்களின் அரசனே! கோள் சொல்லித் திரியும் தீயோர் கையில் என்னைப் பிடித்துக் கொடுத்து, உயிர் வாடித் துன்பம் அனுபவிக்கும்படிச் செய்யுங்காரணத்தை நான் அறியேன்!
அந்த கார விலாச உடம்பு உடை6
குகதெய்வமே! இருள்போன்ற கரிய நிறமுடைய உடம்புள்ள இயமன் வந்து குத்தி உயிரைப் பிடித்துச் சென்ற பின்பு, பந்தல் நடுவில் கிடத்தி ஆசையுடைய சுற்றத்தார் கூடி அழாத வாழ்வை அடைய, என் மனத்தை உன் திருவடி மலரில் பொருந்த வைத்து உனையே துதி செய்திடும் உன் சொந்தக்காரனாக நான் ஆன பின்பு என்னை இன்னும் நீ சோதிப்பது ஏன்?
இம்மையில் சுகம் தந்து அதன் மேலுமேல்7
பிரமதேவனும் திருமாலும் வணங்கும் குமரேசனே! இம்மண்ணுலக வாழ்வில் இன்பம் தந்து அதற்கு மேலும் மேல் உலகத்தில் மேலான பதவியில் வைக்கும் சிறந்த பொருளாயுள்ள உன் செவ்வையான திருவடிகளை, எப்போதும் நினைத்துக் கை குவித்துவரும் என் கைகளால் தம்மையே பெரியதாகப் புகழ்ந்து பேசும் வீணரைச் சார்ந்து, அவரைக் கும்பிடச் செய்த என் அறிவின்மையை விம்மும் நான் மனத்துள் நினைத்துச் சிரிக்கின்றேன்.
என் உற்பன்னம் முவ்வாறு இரண்டு ஆண்டு எனா8
எம் தந்தையே! திருச்செந்திலில் எழுந்தருளியுள்ள குமரேசனே! என் பிறப்பு உண்டாகி இருபது ஆண்டுகள் என்று இங்குள்ளவர்கள் கணக்கிடுகிறார்கள்; கூறப்படும் அதில் உன்னை நினைத்ததெல்லாம் சொல்லப்புகின், ஒரு ஏழாண்டுகள் எனலாம்; அந்த ஏழிலும் மனத்துள் கவலையின்றி உன்னையே நாடி இருந்த ஆண்டுகள் ஒரு நான்கு எனவும், சங்கடம் கொண்ட ஆண்டுகள் ஒரு மூன்று என்றும் கூறலாம்! இன்னும் என்ன நடக்குமோ அறிந்திலேன்!
பன்றி ஒன்று அகல் நேமியைத் தோண்டவும்9
திருமால் பன்றி உருவுகொண்டு பூமியின் கீழ்ப் பகுதியைத் தோண்டித் திருவடியைக் காண முயலவும், பிரமதேவன் அன்னப்பறவை உருவு கொண்டு பரந்த வானுலகத்தை நோக்கிப் பறந்து திருமுடியைக் காண முயலவும், நின்ற முக்கண்ணுடைப் பெருமானுடைய எப்போதும் இன்பமாய் உள்ள மைந்தனே! இங்கு உன் துணையில்லாமல் வேறு ஒரு துணையும் எனக்கு இல்லை தலைவனே! உன்னை நம்பினோரை நீ கைவிடமாட்டாய் என்ற சொல்லும் பொய்யாகுமோ? நீங்காத அன்பை என்மீது வைத்து இன்பமே கொள்ளச் செய்வாயாக!
வெண்டலைக் கையர் ஆடு அறக் காட்டு அழல்10
தேவனே! அண்ணாமலைப் பெயரான அருணகிரிநாதன் என்னும் பெயருடையானை அடிமைகொண்ட ஆறு மாமுகத் தெய்வமே! வெண் தலையைக் கையிலேந்திய சிவபெருமான் (பிச்சடனமூர்த்தி) நடனம் நீங்க, காட்டிய அக்கினி விவரமான மாயைச் சுட்டு அடக்கும் தன்மையைத் தொண்டனாகிய நான் கண்டு மனம் மிக மகிழ்ந்து உன்னைத் தொழுதும் என் உருவம் தெரிந்து அவ்விடத்தில் கண்டிடும் அறிவால் உனது திருவருட் பிரகாசத்தில் உய்ய வேண்டும்.