Logo


English
முன்னுரை:-

இப்பதிகம் “ஸ்ரீமத் குமார சுவாமியம்” என்ற ஆறாவது மண்டலத்தைச் சார்ந்ததாகும். சென்னை என்ற தலைப்பில் சென்னைக் கந்தகோட்டத்தில் எழுந்தருளியுள்ள கந்த வேளைப் பாடிப் பரவியுள்ளார்கள். “சென்னை” என்ற தலைப்பில் முதற்பத்து, இரண்டாம் பத்து என இரு பத்துக்கள் உள்ளன. இப்பதிகத்தை இசையுடன் பாடினால் கேட்க இனிமையாக இருக்கும். நாள்தோறும் பாராயணம் செய்து வந்தால் ஆணவமலவம் அழியும். அறிவு ஓங்கும். பொருளும் அருளும் கிட்டும். இறுதியில் முத்தியும் வாய்க்கும் என்பது சுவாமிகளின் வாக்கு.

சென்னை

(முதற் பத்து)
கலிநிலைத் துறை
இரண்டாமெழுத்தொன்றிய சிறப்புடை அடியெதுகை

அடியொன்றற்குப்பதினேழக்கரம்
தந்தத்தா தந்ததத் தனதன தனதன தன்னத்தா


கங்கைக்கோ ரின்பச்சேய் களிகெழு நுதல்வளர் கண்ணற்சேர்
மங்கைக்கோர் செம்பொற்சேய் மணிமழ மயில்வரு சென்னைச்சேய்
செங்கைத்தா ரம் பொற்காழ் திகழுரு விறையெனு மெண்ணத்தார்
கொங்கைக்கோ ளென்கைப்பே கொளவழி யிலைகொள லின்னிக்கே.

1


என்றக்கால் வன்கட்டா மிருமல மிறுமுத மன்னத்தான்
மன்றக்கேழ் விஞ்சைக்கோன் மழமுனி யயிலிறை பொன்னைக்கால்
குன்றக்கான் வஞ்சிக்கோர் கொழுநன சுரர்மற லென்னச்சூர்
வென்றக்கா லண்டர்க்கேர் வியனுல கருண்முதல் சென்னைச்சேய்.

2

அடியொன்றற்குப்பதினெட்டக்கரம்
தன்னத்தா தன்னத்தா தனதன தனதன தனனத்தா


சென்னைச்சே யென்னப்போ மளவறு பவவலி திருநட்பாம்
முன்னைப்பே ரன்னத்தே யிவரயன் விறலற மொழிமுற்கோ
பொன்னைச்சே ரண்ணற்கோர் மருகன்ம லயமுனி புகழ்பொற்போன்
மன்னைப்பே ணன்னட்பார் பெரிதுறை தருமணி மனைமிக்கார்.

3


கண்ணத்தா விண்ணத்தா கலைஞர்த லைவவுயர் கமலத்தான்
எண்ணத்தா பொன்னத்தா வெழின்மயி லிவர்பர வுலகைத்தான்
பண்ணத்தா வுண்ணத்தா பனிமல ரயிலொரு துரிசிற்கீ
திண்ணத்தா சென்னைச்சே யெனநனி பரசுவர் தெருண்மிக்கார்.

4

அடியொன்றறற்குப் பத்தொன்பதக்கரம்
தனனத்தா தனனத்தா தனதனதனதன தன்னத்தா


கரணத்தா வுறலிற்பே யெனவுழி தரறவிர் கண்ணர்க்கீ
சரணத்தா னருளிற்கோர் தனிமுதல் சுரர்பகை தன்னைச்சா
டரணத்தா னமலப்பே ரறிவினன் முனிவரர் முன்னிக்காண்
முரணத்தான் மகிழ்விற்கா முறுமரு மகனவிர் சென்னைச்சேய்.

5


அடியைக்கா முறன்மிக்கா ரடிமல ரணைதொழி லென்னச்சார்
படியிற்கோ ளெதுநட்பீர் பகருமி னொருகுரு கென்னக்காண்
கொடிபொற்போ டணைகைக்கோ குணகடன் மணிதரு வண்மைத்தான்
மிடியைப்போழ் திருமிக்கே விளைநில நிரைவளை சென்னைச்சேய்.

6

அடியொன்றறற்குப் பதினேழக்கரம்
தானத்தா தானத்தா தனதன தனதன தன்னத்தா


ஆடற்கோ கூடற்கோ வரனொரு மகனறு சென்னிக்கோ
பாடற்கோ நீடெற்கோ பகரரு மொருபெரு விண்ணிற்பார்
நாடற்கோர் பீடத்தார் நவைதபு சிவமரி பெண்ணைத்தார்
சூடற்கோர் சூரட்டா னதிபதி சுடர்புரி சென்னைச்சேய்.

7


வானிற்பா னானிற்பான் மலைகட லெரிவளி யுண்ணிற்பான்
மேனிற்பா னூனிற்பான் மிளிருயி ரிருதய விண்ணிற்பான்
நூனிற்பார் பானிற்பா னுதிநுகர் செவியொடு பன்னக்கார்
போனிற்பா னேர்நிற்பார் பொருளருள் பெறவருள் சென்னைச்சேய்.

8

தன்னத்தா தன்னத்தா தனதன தனதன தன்னத்தா


மண்ணட்பார் மண்ணிற்பார் மருமல ரணிபுனை சென்னைச்சேய்
விண்ணட்பார் விண்ணிற்பார் விமலவ முதமது கொன்னிக்காய்
உண்ணப்பாய் கண்ணிற்பா ருலகம தவரவிர் கண்ணிற்கோர்
விண்ணொப்பாய் மன்னற்கோர் மிடியிலை யிடரிலை நன்னட்பீர்.

9

தன்னத்தா தன்னத்தா தனதன தனதன தந்தத்தா


இன்னற்சூர் துன்னப்போர் தருபகை ஞருமிற வென்றுட்கா
வன்னற்சூ ரென்னப்போர் புரிகரி மகள்குற மங்கைக்கே
தன்னற்பான் முன்னிற்பா னெனுமுரை யினிதுயர் சந்தற்கார்
கன்னற்கே சென்னைக்கோ யிலிலுறை யெழின்மிர் கந்தற்கே.

10

சுவாமிகள் இதனை 1844ஆம் வருடம் சாலிவாகன சகாத்தம் துர்மதி ஆடி மாதம் 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை (7.7.1921) அன்று இயற்றினார்கள்.


Home    |    Top   |    Back