39. ஓம் மகார பதயே நமோ நம: மூல மந்திரமாகிய "ஓம்" என்ற பிரணவம் அகரம், உகரம், மகரம் என்று பிரியும். இம்மூன்று ஒலிகளும் முறையே ஆகல, காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் அவற்றை செய்யும் அயன், அரி, அரன் என்ற மும்மூர்த்திகளையும் உணர்த்தும். அந்த மும்மூர்த்திகளையும் அதிஷ்டித்து நிற்கும் முருகனே மூவர் தேவாதிகள் தம்பிரான் ஆவான். அவனே பிரணவ வைசியன் என்க.
40. ஓம் விகாச பதயே நமோ நம: எங்கும் துன்றி நிறைந்த இறைவனான குகபதிக்கு வணக்கம்.
41. ஓம் ஆதி பதயே நமோ நம: எல்லாவற்றிற்கும் முதற் காரணமாகிய தலைவனுக்கு வணக்கம்.
குமாரஸ்த்வம் என்ற இச்சிறுநூல் ஓர் ஆறெழுத்து மந்திர மறையாகும். இந்நூலின் முதல் ஆறு அடிகள் ஆறு என்ற எண் அமையவருவது குறிப்பிடத்தக்கது. இதில் குமாரபிரானது திருமுகம், திருக்கைவேல், மயில், இரு தேவியர் முதலிய அனைத்தும் பேசப்படுவதால் இதனைப் பாராயணம் செய்வோர் குமாரப்பெருமானை இரு தெவியற்களோடும் மயில்மீது தரிசிக்கப் பெறுவர் என்பதும் குமாரப் பெருமான் திருவருளும், பாம்பனடிகள் குருவருளும், சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வையும் தந்தருளும் என்பதும் திண்ணம்.
திருமதி வ.மரகதவல்லி எம்.எஸ்.சி.,எம்.எட்., டி.எஸ்.எம்.
புதிய நம்பர் 16 - பழைய நம்பர் எம்.8
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் காலனி
கொளத்தூர் - சென்னை - 600 099.
தமிழ்நாடு - இந்தியா.
தொலைபேசி - +91-44-25502526
கைப்பேசி - 09444958526
மின்னஞ்சல் -thiruppalli@yahoo.com