Logo


English

தேவலோகத் திருவிளையாடல்

(ஐந்தாம் பத்து)

இப்பாடல் எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் (இசை) இரண்டுசீர் வண்ணம் ஆகும்

1. குளிர்ச்சியுங் களிப்பும் பொருந்திய கண்ணின் நலத்தையுடைய சரஸ்வதி நாயகனாகிய பிரமன் அப்பொழுது பின்வருமாறு பேசலுற்றான் – கரும்பு போன்ற மொழியுடைய அமரர்களே! வேதங்களுமளந்துரைக்க வொண்ணாத ஒப்பற்ற பண்டைப் பரம்பொருளே இங்கு நம்மெதிரில் எழுந்தருளியிருப்பது. நம்மால் வெல்லக் கூடாத வலியவராகிய அசுரப் பெருங்காட்டைக் குற்றமில்லாத குழந்தையுருவிற் போந்து அழித்தபலமொன்றனைக் குறிப்பிடினும் யான் சொல்லுமுண்மை தெள்ளிதின் விளங்கும்.

2. ஆகலின், விளங்குகின்ற இக்குமாரமூர்த்தியின் ஆற்றலை எண்ணில்லாத காலங்காறும் யானோதினாலும் (அல்லது) சிவபிரானே யுரைத்தாலும் அஃதளவு படாதுயரும். இப்பெருமானது மாசற்ற வரலாற்றைச் சொலுமுறையே நன்முறையாம். அதனைப்படித்தலும், பிறர்க்குக் கூறலும், கேட்டலும், நெஞ்சிற் பதிய வைத்தலும் பெரிய புண்ணியமாம்.

3. இக் காரணத்தால், இப்பெருமானது பெருமையில் ஒருசிறு பாகத்தை நீங்களறியும்படி அரிய வேதமந்திரவுண்மை பொருந்த இவனுடைய பல்லாயிர நாமங்களுட் சிலவற்றை யிங்குக் கூறுவேனென்று சொல்லத் தொடங்கினான். ஓமன், ஓம் பிரகாசன், ஓஞ்சரீரி, ஓம், குமாரன், சோதி, ஆதி, புலிங்கமூர்த்தி, சுரேசன், ஈசன், மகேசன்.

4. சேயவன், சரவணபவன், சிவநந்தனன், உமைநந்தனன், தூயவன், பகவான், அனந்தன், இளம்பிரான், அதிசுந்தரன், அரியயனறியாப் பரம்பொருள். திருமான்மருகன், சத்துரு சிங்கம், மங்களமரபினன், தேவர்திண்மை கொன்றெழல் செய்த சேய்.

5. காத்திகேயன், அனேகதேகி, கடம்பன், ஆடகவாடையன், சிறந்தஞானி, சுவாமி, செச்சையன், “ஆன்ம” சுத்த வாச்சியன், குறிஞ்சிக்கிழவன், பொன் போலொளிர் மேனியன், மா மறையாசனன், சிவலோகன், மாமுதியோன், அரன், அன்பருக்கன்பன், உயிர்களுளக் கூத்தன், ஏகன், அகோசரன்.

6. அறுமுகன், சிவன், அறுமுகச்சிவன், மகாருத்திரன், நித்தியன், அறுகுணன், குகன், எண்குணன், ஆனந்தன், பஞ்சகிருத்தியன், நிர்க்குணன், முனிவர் நெஞ்சுறை பிரமம், வேலிற்கிறைவன், அளவிடப்படா விச்சுவரூபி, வலிமிக்க மகாமயூர பிரான், பெரிய தகரூர்பிரான்.

7. அன்னமூர்ந்தோன், பச்சைக்குதிரையூர் பரமன், கலைமானூர் காவலன், பெரும் புலியூர் பிரான், சிங்கமூர்ந்தோன். கருடப்பறவையூர் சேய், இமிலுடை யெருதேறி, அழிகிய யானையூர்தி, அழகு நிலைபெற்ற மகா சரபத்திலேறிய வலியன், வாயுநடாத்துந் தேருடையோன்.

8. வீரன், வச்சிரபாணி, சுப்பிரமணியன், முத்தொழில் விண்ணவன், சூரன், அட்டமூர்த்தி ஆதி, பூரணபுண்ணியன், சிவசூரியன், தாரகற்றெறு சிங்கம். வீறு பாடவிர் சிங்கமுகாரி, மகா தீரன், மற்புய சூரையீரரி, செய்ய சேவலுயர்த்தவன்.

9. சருவகாரண காரணன், சருவாயுதன், முற்றறிவினன், சருவயோகன், அழிவில்லாதவன், பதி, சம்பு, சங்கரன், நூபர பாதன், சருவபூரண வடிவன், மா தகராலயன், பசுபதி, அஹம், சருவலோகபிரான், இளம்பூரணன், சருவேசுவரன், வேள்.

10. சிறந்த விண்ணுலகைத் (தேவர்கட்குத்) தந்தவன், விளங்குகின்ற சோமலோக சடானனன், செக்கர்வேள், குழகன், துவாதசாயுதன், சிவதேசிகன், மிக்க யோக வியாபி, கந்தன், அகண்டன் என்று நான்முகன் நவின்றனன்; இனிய திருப்புகழாசிரியருடைய தெய்வத்தின்பா லன்புடையீர்!


Home    |    Top   |    Back