பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கணிணி மற்றும் இணைய தளம் மூலம் தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் உடனடியாக தேவைப்படுகின்றது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

ஆங்கிலம் தமிழ்

Recording of Srimath Pamban Swamigal Guru Pooja telecasted on 4th June 2018, 4.00 PM to 7 PM.


பரிகாரங்கள் செய்வதைவிட அருளாளர்கள் அருளிய பதிகங்கள்
ஓதி அல்லது பாடி நம் வினையை தீர்த்துக் கொள்ளலாம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் » முதல் மண்டலம் இசை

முதல் மண்டலம் இசை


வரி எண். பதிகம் பெயர் மற்றும் நன்மை மொத்தம் பாடல்கள் திரும்பி போக
26. பெரும்பேறு 01

பெரும்பேறு

திருவளர் பரங்கிரி திருச்செந்தி லஞ்சோலை
திருவேர கம்பழநிமா
திரங்குன்று தோறாட லென்றறையும் வரைகளிற்
சேர்திருத் தணிகைபொதிகை
சித்தர்மலை கந்தகிரி திருவேங்க டஞ்சிறிய
திருமலை விராலியோங்கல்
திருவுரு விலங்கல்ரஜி தாசலங் கழுகோதி
சிவசயிலம் வேள்வியசலம்
மருவளரு மேருகிரி சீசயில நீலகிரி
மயிலநா கஞ்சிகண்டி
மலைக்கொல்லி மலைபன்றி மலையருண கிரியென்னு
மலைபுள்ளி ருக்கும்வேளூர்
வள்ளீயூர் குமரகோட் டங்கொடும ளூர்கதிரை
மகிமைசால் சமராபுரி
வனப்பே றிலஞ்சித லரிப்பா டுடுப்பைநகர்
மதுகைவே லூரெண்கணூர்
குருவள ரரும்பூண்டி நன்செய்நிமிர் மேட்டுக்
குடித்தலந் தில்லைமுதலாங்
கோவில்களி னும்பரம பத்தர்களி னிருதய
குசேசயங் களினுமுறைவாய்
குயிலரிய வண்டங்க ளெங்கணு மிருப்பாய்
குணித்துப் பிரக்கவரிதாய்க்
குடிலங்க ளுக்குமொரு குடிலமென நிற்பாய்
குரங்குவா ரெண்ணுவண்ணம்
அருவளரு முள்ளத்து ளேயுணர்ந் தருளுவா
யடியனென் றுன்புதபுத
ஆற்றுநின் பேருளத் துள்கா திருப்பினா
னாரிட முரைப்பனெந்தாய்
அயில்வேலு மாண்டலைத் துவசமு மலங்கவென்
னம்மைதெய் வானைவல்லி
அருகிருந் தருளமா மயிலுகைத் தெதிரில்வந்
தருள்பெரும் பேற்றுமுருகே.