பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கணிணி மற்றும் இணைய தளம் மூலம் தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் உடனடியாக தேவைப்படுகின்றது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

ஆங்கிலம் தமிழ்

Recording of Srimath Pamban Swamigal Guru Pooja telecasted on 4th June 2018, 4.00 PM to 7 PM.


பரிகாரங்கள் செய்வதைவிட அருளாளர்கள் அருளிய பதிகங்கள்
ஓதி அல்லது பாடி நம் வினையை தீர்த்துக் கொள்ளலாம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் » முதல் மண்டலம் இசை

முதல் மண்டலம் இசை


வரி எண். பதிகம் பெயர் மற்றும் நன்மை மொத்தம் பாடல்கள் திரும்பி போக
62. அபிமானமறுத்தல் 02
பலன்ஆசையை நீக்க வழி தெரிந்துக் கொள்ள வேண்டுமா?
மேலும் பலன்கள் அறிய - இனிய வாழ்விற்கு வழி

அபிமானமறுத்தல்

எண்சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

முதுமறைகள் புகழ்மணியை முதியர்மொழி யொளிர்மணியை
மூடரறி யாமணியை மோன மணியை
மதர்வுகெழு மாவறிவுக் குருமணியைத் திருமணியை
மதிநடன மன்றமிருந் தவிரு மணியை
நிதமணியைக் குமரகுரு தாசனகத் தசைமணியை
நினைப்பவர்க்கு வீடுளதென் றிமிழு மணியை
இதமணியைப் பரசிவசுப் பிரமணிய மதைநினையு
மிதயரடி மலர்களென் னவிர முறவே.

நேரிசையாசிரியப்பா

நிலமிசை யாகம நெறியி லேனும்
கலைமலி நான்மறைக் கடையி லேனும்
இறைநூ லாயவவ் விரண்டினு மேனும்
சிறிது படனஞ் செய்தந் நடவை
திடப்படா துலக மாயையிற் சிக்குபு
விடப்படா தலைவோர் விரதமுள் ளோரைக்
கண்ணுறு காலவ ரில்லத் திருந்திடின்
கண்ணக லில்லையேன் கருதின ரென்பர்
துறவிருந் திடினேன் றுறந்தன ரென்பர்
இறையா லயம்புக் கிருந்து வழிபடின்
இவர்க்கே னாலய வழிபா டென்பர்
அவணமாற் றாவிடி னாற்றிலென் னென்பர்
சடைமுண்ட மிலையேற் றவமின் றென்பர்
சடைமுண்ட முளவேற் சால்புக்கோ வென்பர்
ஓரிடத் திருப்பி னுழிப்பற் றென்பர்
பாரிடத் துலாவிற் பசுவலை வென்பர்
உண்டுடுத் திடினமை யொத்தவ ரென்பர்
உண்டுடுக் காவிடி னுஞற்றிலென் னென்பர்
பேசி விளக்கிடிற் பிதற்றலே னென்பர்
பேசா திருந்திடிற் பிறர்க்கென் னென்பர்
விழித்து நோக்கிடின் வெளிமுக மென்பர்
விழியா திருந்திடின் விழிக்கிலென் னென்பர்
அற்புத மிலதே லருளின் றென்பர்
அற்புத முளதே லணிவித்தை யென்பர்
ஆதலின் மனனே யவனியர் பலவா
றோதிழி வுக்குநீ யுள்ளுலை வேதும்
உறலொழிந் தெம்மா னுரைத்தசன் மார்க்க
முறையி லுனக்கெது பிடித்தமு முயல்வும்
உள்ளதோ வவ்வா றுற்றெங் கடவுளாய்
உள்ள குகேசனை உலப்பி லுண்மையை
அகண்ட பூரண வருட்பெருஞ் சோதியை
அகண்ட பூரண வானந்த வாரியைச்
சொல்லற நிற்குந் தூய வெளியைச்
சொல்லின் மதுரஞ் சொரியருட் கனியை
நினைக்கி னினைந்து நிகழ்ந்து பற்றுபு
நினையா தேனீங் கிடுமோ ரியற்கையைத்
தருவரு ணகிரி சிந்தித்த தேவை
உருவரு வின்றி யொளியிரு ளின்றிச்
சுத்தசித் தாகச் சூழ்ந்து
சத்திய முத்தி தானடை வாயே.