நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்
இரண்டாம் மண்டலம் இசை
முதற்கண்டம் இசை
| வரி எண் | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
|---|---|---|---|
| 10. | திருவேரகம் | 10 | |
| பலன் | முருகனின் கருணையை சீக்கிரம் பெற வேண்டுமா?
|
||
திருவேரகம்
பாடல் - திருவேரகம்
பண் - கெளசிகம்
தேவாரப் பாடல் - வீடஆலவாயில்
இராகம் - பைரவி
தாளம் - ஆதி
நஞ்ச முண்ட கண்டனார் நயந்து தந்த செல்வனே
பஞ்ச பாத கந்தணந்த பண்பி னோர்தொ ழுங்குகா
இஞ்சிசூழ்ந்த டங்கண்மேய வேர கச்சுரேசனே
தஞ்ச மென்ற டுத்தவென் றனைப்பு ணர்ந்து கொள்வையே .. 1
வாசு வன்றி ருக்குசத்து நீழ லில்வ ழுத்திய
ஈச தூ ணைக்கிணங்கி னோர்பு ரந்த கித்துளோர்
ஏசு றாத ளித்தசெல்வ வேர கச்சு ரேசனே
தாச னென்ற டுத்தவென் றனைப்பு ணர்ந்து கொள்வையே .. 2
புண்ட ரீக லோசனன்பொன் பூத்த வேத
கண்ட னென்னு மூவகைக் கருத்த ருந்தொ ழும்படிக்
கெண்ட கைக்கு ணங்கணீடு மேர கச்சு ரேசனே
தண்ட னிட்ட டுத்த வென் றனைப் புணர்ந்து கொள்வையே .. 3
அங்க ணார்சி காவளத்தி லேறு கின்ற வாண்டவா
மங்கை பாக னார்க்குவேத வாக்குமூலஞ் சொன்னவா
எங்கு லந்த ழைக்கவந்த வேர கச்சு ரேசனே
சங்னை யுற்ற டுத்தவென் றனைப்பு ணர்ந்து கொள்வையே .. 4
மாக ரோடு நாகரும் வயங்கு மண்ட லத்தரும்
போகு முன்னெ மக்கடைக்க லம்பு கிற்ச மன்றிசைக்
கேகி டார்மெய் யென்றுரைத்த வேர கச்சு ரேசனே
தாக முற்ற டுத்தவென் றனைப்பு ணர்ந்து கொள்வையே .. 5
இந்த நாளு னைக்கருத் திருத்தி யென்க ணேயுள
பந்தம் யாவு மற்றிடாத பண்பி னைப்பொ ருத்தினான்
எந்த நாளு நன்குறேனல் லேர கச்சு ரேசனே
தந்தை யென்ற டுத்த வென் றனைப்பு ணர்ந்து கொள்வையே .. 6
நாத வொண்சி லம்பலம்ப நாட கம்பு ரிந்திடும்
பாத பங்க யங்களைப் பணிந்து மிந்த நாளையோ
ஏது மின்றி மாய்வனோநல் லேர கச்சு ரேசனே
தாதை யென்ற டுத்தவென் றனைப்பு ணர்ந்து கொள்வையே .. 7
பூமி யந்த ரத்தினும் பொருந்து மேன்மை பூக்கவே
யாமி யக்கை லாயநாதற் கோமு ரைத்த வையநீள்
ஏமு றுந்த வத்த ரேத்து மேர கச்சு ரேசனே
சாமி யென்ற டுத்தவென் றனைப்பு ணர்ந்து கொள்வையே .. 8
மங்கை நாடுய் பஞ்சவன் மகட்கு மாமு கங்கரந்
தங்க மான நன்முகங் கொடுத்த வாதி யன்பினால்
எங்கு லங்கொ ளீசனேநல் லேர கச்சு ரேசனே
சங்கம் வேட்ட டுத்தவென் றனைப்பு ணர்ந்து கொள்வையே .. 9
உம்ப ரும்பு கழ்வகுப் புரைத்த வன்றொ
உம்ப ரும்பு கழ்வகுப் புரைத்த வன்றொ டுத்தசீர்
எம்பி ரானெ னக்குணிற்கு மேர கச்சு ரேசனே
சம்பு வென்ற டுத்தவென் றனைப்பு ணர்ந்து கொள்வையே .. 10

Pamban Swamigal Tiruppaliezhuchi Trust Document (Reg no: 98/2024)