நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்
இரண்டாம் மண்டலம் இசை
முதற்கண்டம் இசை
| வரி எண் | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
|---|---|---|---|
| 24. | அடியாரகம் | 10 | |
| பலன் | வினைகள், தீவினைகள், ஊழ்வினைகள் நீங்க வேண்டுமா?
|
||
அடியாரகம்
பாடல் - அடியாரகம்
பண் - சாதாரி
தேவாரப் பாடல் - வானவர்கள் தானவர்கள்
இராகம் - பந்துவராளி
தாளம் -
மாமணிமு டிச்சுரர்கள் கோனெனும்வ னப்புடைய
மாமயிலி ருந்தசுரர்கோன்
பேமுறவெ திர்த்துநெடு வேல்கொடவ னீளுடல்
பிளந்திறவ யர்ந்தவிறலோய்
ஆமய மிலாதுபர வோமயம தாகவடி
யாரகமி ருக்குமுருகா
போமுனம ணைத்திரிபி லாதநிலை யானபாரி
பூரண மெனக்கருடியே. .. .. 1
பாதலம னைத்தையு நடத்தடல்கொ ளாடகரும்
பாரநர கங்களெவையும்
மாதிதி புரிந்திடுகூர் மாண்டருமண் ணாயபிர
மாண்டமதை நீண்டகாவல்கொண்
டாதாரித் திருப்பவரு மேத்துமுத லாகியடி
யாரகமி ருக்குமுருகா
போதவொளி யைப்பெருக்கி யாசினிலை யானபாரி
பூரண மெனக்கருடியே. .. .. 2
துங்கமெய்ச் சதருத்திர ருங்ககனே சாதிகளுந்
துன்றுமண்ட லாதிபர்களும்
பங்கமற்ற வெளடு வடுநமா வுஞ்சுவாகா
பட்சுதா வெனப்பகருமே
ழங்கமுள்ள சத்தகொடி மந்திரரு மெச்சவடி
யாரகமி ருக்குமுருகா
பொங்கிரு ளறுத்தருள்வி ளங்குநிலை யானபாரி
பூரண மெனக்கருடியே. .. .. 3
சுந்தாமல் கண்டநிரை யத்தனையு முச்சியிற்
சுமந்திடுமா தாரசத்தியும்
அந்தவொரு சத்தியுட னார்ந்தசுத்த மாயையை
யனாரதந டத்தனந்தரும்
அந்தமுயர் சூக்குமரு மேனையரு மெச்சவடி
யாரகமி ருக்குமுருகா
புந்தியைய கண்டவெளி யாகநனி செய்துபாரி
பூரண மெனக்கருடியே. .. .. 4
சீர்த்தியுள்ள பிரணவர்தே சேசாரிறை காலரஞ்சு
தீர்த்தரெழில் கொண்டசுசிவர்
கீர்த்திகொள்சா தாக்கியர்நற் சூக்குமரொண் காரணரெ
னக்கிளத்து கின்றவொர்தச
மூர்த்திக ளனாரதம னந்தமுறை மெச்சவடி
யாரகமி ருக்குமுருகா
பூர்த்தியெனுஞ் சிற்பர வெளிக்குளே யடங்குபாரி
பூரண மெனக்கருடியே. .. .. 5
வித்தைபெரு காடகரென் மூர்த்திக்கதிட் டானராம்
வியாபகர்கூர் மாண்டமூர்த்தியின்
உத்திக்கதிட் டானரென்வி யோமருயர் குண்டலியென்
றோதிடுமா தாரசத்திமேல்
அத்தனெனக் கூறவுள னாதாரிவர் மெச்சவடி
யாரகமி ருக்குமுருகா
பொத்தையுடல் விட்டிடுமுன் முற்றுநிலை யாகுபாரி
பூரண மெனக்கருடியே. .. .. 6
ஏசறுவி யாபகரும் வியோமவடி வோரனந்த
ரென்பவரு மன்பனாதரும்
நேசமொடு நாற்புடைய மேத்தநடு வேயமர்ந்து
நீடழக னந்தரைநடாத்
தாசிலிறை யாயவிர னாசிருத ராயுமடி
யாரகமி ருக்குமுருகா
பூசுரர்பு கழ்ந்திடுமொர் வாழ்வெனு மகண்டபாரி
பூரண மெனக்கருடியே... .. 7
மிக்கநெறி யத்திரியின் கண்ணயன் சிருட்டிபெரு
விண்டுநெஞ்சு வெங்கனன்முகம்
சொக்கவமு தக்கடலெ னும்புலங்க ளில்விரிந்து
தோன்றினதெ னச்சொன்மதியை
எக்கலையுந் தோன்றவணி வோன்குமர னாகியடி
யாரகமி ருக்குமுருகா
பொக்கமில்சு வர்க்கர்புகழ் சிற்சுகவ கண்டபாரி
பூரண மெனக்கருடியே. .. .. 8
மண்ணுலகும் வி ண்ணுலகு நண்ணிநண்ணி யுன்னவொரு
மன்னெனவி ருந்துமொருவர்
எண்ணிடவும் பன்னிடவு முள்ளகுறி யொன்றுமின்றி
யெவ்வுயிர்த்தி ரட்குமுயிராம்
அண்ணலெனும் விண்ணெனநி லாவியுள்ள சோதியடி
யாரகமி ருக்குமுருகா
புண்ணியர்வி ரும்புசுக சின்மய வகண்டபாரி
பூரண மெனக்கருடியே. .. .. 9
நீச்சுநிலை யற்றசன னக்கடலை நின்றனரு
ளென்றபுணை கொண்டுகடந்து
பேச்சொடு பிணக்கில்சுக மேவியவெட் டாதமலைப்
பேரனிறை யானதுரையே
ஆச்சாரிய வாயிரம் பெயர்ப்பிரம மாகியடி
யாரகமி ருக்குமுருகா
பூச்சியமி லாதவொரு பூச்சிய வகண்டபாரி
பூரண மெனக்கருடியே. .. .. 10

Pamban Swamigal Tiruppaliezhuchi Trust Document (Reg no: 98/2024)