நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்
இரண்டாம் மண்டலம் இசை
முதற்கண்டம் இசை
| வரி எண் | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
|---|---|---|---|
| 30. | சுப்பிரமணிய ரகசியம் | 10 | |
| பலன் | சுப்பிரமணி என்ற பெயருக்கு விளக்கம் என்ன என்று தெரிந்துக் கொள்ள வேண்டுமா?
|
||
சுப்பிரமணிய ரகசியம்
பாடல் - சுப்பிரமணிய ரகசியம் (திருத்தாண்டஹம்)
இராகம் - ரிகாம்போதி
பொன்னொளிவே ணிவிர்த்திபிர திட்டை வித்தை
பொதிதீபச சாந்திதிகழ் சாந்த்யா தீதை
நன்னர்நிரோ சாதைநா தாந்தை சத்தி
நாதைவியா பினிசமனை வியோம ரூபை
உன்மனையொள் ளொளியனந்தை யனாதை மிக்க
வொளிசெயனா சிருதையெனுங் கலைகண் மேலாய்
என்னகத்தி னீயுதித்தா லன்றோ சுப்பிர
மணியமது தோன்றிற்றென் றிசைப்பேன் மன்னோ. .. 1
முனிவுகெழு தாரகனா மாயை யோடு
மோசவன்மைக் கிரெளஞ்சனையு ஞான வேலால்
நனிமுருக்கிச் சிங்கமுக னென்னுங் கன்ம
நசித்தடல்கொள் வச்சிரசத்தி யானல் லோர்க்குப்
பணிபுரிந்த சூரபன்ம னெனுமாங் காரம்
படராண வத்தைநெடுங் கூர்வே லென்னுந்
தனிஞானத் தாற்பிளந்தா லன்றோ சூர
சங்கார நடந்ததென நவில்வேன் மன்னோ. .. 2
அருளாகு மகண்டசிவ ஞான சத்தி
யதனாலே பிளப்புண்ணு மாண வந்தான்
இருபகுதி படுங்கால மொருபா கத்தி
லெழுந்துவரு முபாதியைக்கீ ழடக்கி மேற்கொண்
டொருபாகத் தெழுந்துவரு முபாதி தன்னை
யுயர்மாயை யடக்கியுல கெல்லா மெந்தம்
பொருளெனவே காட்டுகொடி போட்டா லன்றோ
புள்ளிமயி லூர்ந்துகொடி போட்டா ரென்பேன். . .. 3
அகங்கார மலமடங்கி யமர்ந்த பின்ன
ரதுவிருந்த வவித்தியா புரத்தின் மேலும்
சகம்பேணு மாயையுடைய வலியால் வாதை
தழைக்கும்வா சனைமுளையா வண்ண மாறாப்
பசும்பேணு மனோநாச மெனும்வெள் ளத்தைப்
பரவநனி செயினன்றோ சூர பன்மன்
உகம்பலவா யாண்டிருந்த புரத்திற் றண்ணா
ருததிபோய்ப் படிந்ததென வுரைப்பேன் மன்னோ. .. 4
மாயைவரு மகங்கார மலத்தி னாலே
வவ்வப்பட் டளப்பறுகா லிடுக்க ணுற்றுப்
பேய்கள் போற் சீர்குலைந்து வருந்து மென்றன்
பிரியமுளோ ரோடெனக்கும் பொரிய வீடு
நோயமொடு கொடுத்தாண்டா லன்றோ வானோர்
நெடுநாளா யடைந்தபட ரறுத்தன் னார்தந்
தூயபதி தனைக்குமரப் பெருமா ளென்பார்
சுதந்திரமா யளித்தாண்டா ரென்பேன் மன்னோ.; .. 5
அழியாத வானந்தம் பிரம மென்றே
யறைசுருதிப் படிசுவ்வே யவ்வா னந்தம்
பழிசேராப் பிரமவெனல் விகார மேதும்
பகரவொண்ணாப் பொரியபர வத்து வென்றாம்
பிழைதீர்ந்த ணியமெனறா னதிலே தோன்றிப்
பிறழ்வதென்றா மிவைசுப்பிர மணிய மென்று
மொழியவரு மாகலினா னந்தந் தானே
சொரூபஞ்சேய்க் கெனவறிஞர் மொழிவார் மன்னோ. .. 6
குகமெனுமோர் கூற்றினுக்குப் பொருளான் மாவின்
குகையென்னு மிருதயமென் றாத லானே
குகனெனுமோர் திருநாமக் கடவு ளெல்லாக்
குவலயத்து முளவான்ம கோடி நெஞ்சாங்
குகையிருக்கும் பரமான்மா வெனவா மாலிக்
குகசத்தம் பிறிதொருதே வனுக்கு முண்டோ
இகபரமுந் துலக்கியரு ளடிகே ளென்ற
னிதயநடு வமர்ந்தவருட் டிருவே மன்னோ. .. 7
என்றுநிலை பரமான பொருளாந் தெய்வ
மிணையில்லா வனுபவத்தில் வெளியாந் தன்மை
துன்றுமிலை மறைந்திருக்குங் காய்தா னந்தத்
தொடக்கான விலைவிலகத் தோன்று மாபோல்
நின்றுவெளி யாமதனாற் சுப்பிர மணிய
நித்தியமல் லாதுபுதி தன்றென் றோர்வார்
குன்றலற வாழ்வாரே யாண்டு மென்றன்
குற்றேவல் கொண்டருளுங் குருவே மன்னோ. .. 8
பூணாரம் புனைதெய்வத் தந்தி தானே
கபுரைதணந்த குகவேட்கு ஞான சத்தி
நாணாணு மிடைவள்ளி யம்மை தானே
நாதாந்த பரம்பொருட்குக் கிரியா சக்தி
காணாமல் வருந்தியரு ணாடு வார்க்குக்
காரிசிலந்த விரண்டுசத்தி வாயிலாகச்
சேணாடர் கணிக்காரிய போக மூட்டிச்
சேர்த்திடுமப் பரப்பிரமக் குழவி மன்னோ. .. 9
உருநிலையிற் குழவிவடி வுடனி ருந்தே
யுயர்தந்தைக் கோம்பொருள்சொன் னதுவி யப்பே
அருநிலையி லுயிர்தோறு மிருந்து மந்த
வாவிகட்கெட் டாதிருத்த லதிவி யப்பே
பெருநிலையி லாரியனுமான் வீர வாகுப்
பெயருடையான் கொண்டவுருக் களைக்க டந்து
கரசிரங்கள் பலவோங்க நின்ற நீர்மை
கணிப்பவரார் திருப்புகழ்சொன் னவனாண் மன்னே. .. 10

Pamban Swamigal Tiruppaliezhuchi Trust Document (Reg no: 98/2024)