பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கணிணி மற்றும் இணைய தளம் மூலம் தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் உடனடியாக தேவைப்படுகின்றது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

ஆங்கிலம் தமிழ்

Recording of Srimath Pamban Swamigal Guru Pooja telecasted on 4th June 2018, 4.00 PM to 7 PM.


பரிகாரங்கள் செய்வதைவிட அருளாளர்கள் அருளிய பதிகங்கள்
ஓதி அல்லது பாடி நம் வினையை தீர்த்துக் கொள்ளலாம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்

இரண்டாம் மண்டலம் இசை

முதற்கண்டம் இசை


வரி எண் பதிகம் பெயர் மற்றும் நன்மை மொத்தம் பாடல்கள் திரும்பி போக
35. மிகைவெல் வயவை 10
பலன்கொடிய துன்பங்களில் இருந்து அறவே நீங்க வேண்டுமா?
மேலும் பலன்கள் அறிய - இனிய வாழ்விற்கு வழி

மிகைவெல் வயவை

பாடல் - மிகைவெல் வயவை

பண் - யாழ்மூரி
தேவாரப் பாடல் - மாதர் மடப்பிடியும்
இராகம் - அட்டாணா
தாளம் - ரூபகம்

மாமலைச் செல்வியையொர் புறம் வைத்துயர் வெண்டிகழ்
வரை யுறை யிறை யவ ரருளி னுய்யுநறுங்
கோமிளிர் வானவர்கள் பழிச் சிப்பணிந் தாம்வரங்
கொள வுள கட வுள ரெனவி ளங்கியொண்மை
நாமகள் காமுறுமே ழிசைப் பூதக ணம்பல
சா கம பத நியென் றுரிய வணம்பாட
ஏமவு ளங்கனிந்து நடஞ் செய்குகன் மெய்யடி
தொழு தெழு மறி வுளர் மிகையை வெல்லுவரே. ..  1

மைச்சல ராசிவளைநில மேவுப சுக்களை
மறு புதை புக வயர் பிரம னார்சிரசிற்
கைச்சுமங் கொண்டுகுட்டித் திருக் காலுதை யுந்தருங்
கரு ணையை யுள விறை பிறக யன்புரியும்
துச்சமி லாததவந் தனைக் கண்டவன் செய்யொரு
தொழி லினை நனி யுத வியபி ரானெனவே
மெச்சிநி தங்குறைவி லருள் வேட்டவன் மெய்யடி
தொழு தெழு மறி வுளர் மிகையை வெல்லுவரே. ..  2

எரிதனி லேட்டையிட்டன் றொரி யாமலு மேடற
லெதிர் செல வுமை மறை விபின மாக்கதவம்
இரிபற மூடிடவும் வள ராண்பனை பெண்பனை
யெனெ வமை யவும் விட மறவு மொருபுத்தன்
பொரியவு டம்பிறவும் பழ வத்திபெண் ணாகவும்
பணி னவர் பர சிறை பிரிய மோடுதந்த
விரிசுட ரானவடி வுடை வேலவன் மெய்யடி
தொழு தெழு மறி வுளர் மிகையை வெல்லுவரே. ..  3

அக்கினி வத்திரத்தான் கையின் மாண்டச கோதர
ரெழு வர்க டரு கென வடல்கொ ளம்பொன்றில்
அக்கண மேவரைந்து நம னுக்குவி டுத்தபின்
பவ ரொடு மற லியு மருகில் வந்துபிர
தக்கிண மாப்பரவு முயர் வுற்றவொர் வீரனின்
றலை வனொர் நிக ரறு சரவணப்பெரமாள்
மிக்கெழின் மேவியவிர் திருப் பங்கய மெய்யடி
தொழு தெழு மறி வுளர் மிகையை வெல்லுவரே. ..  4

ஊனுழை கன்மமுடை யுயிர்க் கூளியைக் கொள்ளைகொள்
வலி மலி மற லழி வுறவு தைத்தகழல்
வானவன் வேண்மகிமை தனைக் கோடிநூ றாண்டள
வறை தாரி னுமு டிவு பெறுவ தின்றெனவோ
ரேனமி லம்பிகைமுன் சொன வேற்றம தற்குடை
யவ னெவ னவன் மயி லிவரு மீசனவன்
மீனுறழ் பொற்சதங்கை மிக வேங்கிடு மெய்யடி
தொழு தெழு மறி வுளர் மிகையை வெல்லுவரே. ..  5

எண்டிசை யும்பெருமைநனி கொண்டவொர் தக்கனீ
ளொரி மக மதில் வசு விரவி யிந்துபருங்
குண்டைய ரன்றோழன் புனல் வேந்தனு யிர்ப்புநி
ருதி சத மக னில குசனி மூலையிறை
சண்டன ருந்தமனெண் கண னாதிபல் பண்ணவர்
தர மற வடன் மற லதுவி ளைத்தமகா
மிண்டனு நானெனவே மிளிர் வேலவன் மெய்யடி
தொழு தெழு மறி வுளர் மிகையை வெல்லுவரே. ..  6

எண்ணறு சிட்டிபுரி விதி தன்னையுந் தண்டுழா
யிறை யையு நுதல் விழி யொரியி னாலொரித்தவ்
வெண்பலி யைப்பூசி முழு வென்பொடு வெண்டலை
மிலைந் தலைந் தெழுந் துழன் றிறுதிந டம்புரியும்
கண்ணொரு மூன்றுடைய கறைக் கண்டனு நானென
மிளிர் சர வண பவன் கணித மில்புகழை
விண்ணவ ரும்வியக்கத் துதித் தன்னவன் மெய்யடி
தொழு தெழு மறி வுளர் மிகையை வெல்லுவரே. ..  7

சீறதி சீற்றமுடைக் கிர வுஞ்சனென் போனெடுந்
திரி புர மென வெழ வவையுளானைமுகன்
கூறரு மூன்றசுர ரெனத் தோன்றிய போதொரு
குறு நகை கொடு பொடி படவெ ரித்தவர்கள்
மாறுப டுந்தொழிலாற் செயு மாயமெ லாங்கெடும்
வகை பணி யுயி ரையு நொடியி லுண்டகுகா
வேறுப டாமலருள் புரி யென்றவன் மெய்யடி
தொழு தெழு மறி வுளர் மிகையை வெல்லுவரே. ..  8

மட்டில டங்காத வண்ட பிண்டச ராசர
வகை முழு வது மவ னுருவி ருந்தநிம்
தட்டவி லோசனத்திற் சத யூபனுக் கன்றருள்
புரிந் தவன் பெரும் பயந் தணிய ஞாங்கரெறிந்
திட்டகு கேசனெனுஞ் சிவ னண்ணலை யெண்ணிநின்
றர †ர சிவ சிவ வெனவி ளம்பியவன்
விட்டக லாதவண மவன் றுய்யநன் மெய்யடி
தொழு தெழு மறி வுளர் மிகையை வெல்லுவரே. ..  9

தேங்கிள ரண்டநிரை களைத் தன்பெருங் கர்ப்பமுட்
சிறு சிறு துக ளென நிறுவி யங்ஙனமே
தாங்கியு மப்பொருளி லுயிர் போலவி ராவியே
தகு குணங் குணி யெனச் சமைய வேவிரித்தும்
ஓங்கிடு மக்குணமொன் றிலி யென்னவு முள்ளதே
வொரு குக னென வரு ணகிரி யுன்னிமகா
வீங்கல ணைந்தபடி யவன் றுய்யநன் மெய்யடி
தொழு தெழு மறி வுளர் மிகையை வெல்லுவரே. ..  10

கலியுகம் 4997 மன்மத (கி.பி.1895) ஆவணி மாதம் 27ஆம் தேதி புதவாரம்