நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்
இரண்டாம் மண்டலம் இசை
முதற்கண்டம் இசை
| வரி எண் | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
|---|---|---|---|
| 43. | வாதனை நீக்க மன்றாட்டு் | 10 | |
| பலன் | மீண்டும் நீங்கள் இந்த உலகத்தில் பிறவாமல் இருக்க வேண்டுமா? அல்லது உங்களது பிறவி அறுபட வேண்டுமா?
|
||
வாதனை நீக்க மன்றாட்டு்
பாடல் - வாதனை நீக்க மன்றாட்டு்
பண் - தக்கராகம்
தேவாரப்பண் - பூவார்மலர்க்கொண்டு
இராகம் - காம்போதி
பூவா ரேர்முடி மலரய னாரிமால்
புதுமா மலர்கொண் டருச்சித்தே
தேவா காவென விறைஞ்சிரு சரணா
சிவனே செவ்வேட் பெயர்நாதா
தாவா நோவெனுங் கலிதனி லமிழ்ந்தோன்
றலைவா காவென் றொலித்தாலே
வாவா வென்றெடுத் தணைத்தருள் பு¡ரியா
மனனோ நீவந் தருளாயே. .. 1
பேழ்வாய்ப் பூதர்கள் பலபல பறைகள்
பிசகா மேகொட் டிடநடமே
காழ்வீ ரார்கழ லொலிதர வுழல்வோர்
கமழ்தோ ளேறு மலர்ப்பாதா
தாழ்வா நோவெனுங் கலிதனி லமிழ்ந்தோன்
றலைவா காவென் றொலித்தாலே
வாழ்வோய் வாவென வெடுத்தருள் பு¡ரியா
மனனோ நீவந் தருளாயே. .. 2
தூயோர் சொல்லினு நினைவினு முளவோர்
சுசிமா ஞானச் சுடர்மணியே
காயா யுள்ளதைக் கனிந்திட விழைப்போய்
கருதா தார்க்கு மருள்குகனே
தாயாழ் பீளுறு கலிதனி லமிழ்ந்தோன்
றலைவா காவென் றொலித்தாலே
மாயா மேயெடுத் தணைத்தருள் பு¡ரியா
மனனோ நீவந் தருளாயே. .. 3
பணியா ரஞ்செறி களச்சசி மகிழ்ச்சி
படவே கூடும் புருகூதன்
திணியார் கேகய மெனவரும் பொழுது
திருவோ டேறு மொருவீரா
தணியா நோவெனுங் கலிதனி லமிழ்ந்தோன்
றலைவா காவென் றொலித்தாலே
அணியோ டாதாரித் தணைத்தருள் புரியா
தவனோ நீவந் தருளாயே. .. 4
பகவா னீயெனப் பனுவல்கள் பகர்மா
பரமா விளம்பூ ரணவேளே
சுகவா னாயவி ரொருபர சிவனே
துவர்சால் கோழிக் கொடியானே
சகவாழ் வாகிய கலிதனி லமிழ்ந்தோன்
றலைவா காவென் றொலித்தாலே
அகணே யோடிவந் தணைத்தருள் புரியா
தவனோ நீவந் தருளாயே. .. 5
அருளா முத்திரை தனைப்பரங் கிரிப்பா
லறுபேர்க் காயன் றருளியமாக்
குருவே சத்திய சரவணப் பொருளே
குகனே தேவர்க் காரியானே
சருமேய் பாடுடைக் கலிதனி லமிழந்தோன்
றலைவா காவென் றொலித்தாலே
அருகே யோடிவந் தணைத்தருள் புரியா
தவனோ நீவந் தருளாயே. .. 6
நீங்கா வன்பர்கள் சததமு நினைமா
நிமலா வேலா வருளாளா
ஓங்கா ரப்பொரு ளெனமறை நவிலு
முதியா மாரியா முருகோனே
தாங்கா நோவெனுங் கலிதனி லமிழ்ந்தோன்
றலைவா காவென் றொலித்தாலே
ஆங்கோ டோடிவந் தணைத்தருள் பு¡ரியா
தவனோ நீவந் தருளாயே. .. 7
புலனோ ரைந்தையு மொடுக்கு நுண் ணுணர்வோர்
புகழ்மா தேவா புலவாமா
வலனே யென்னிரு தயமலர்க் குகனே
மலைமா தேந்து மிளங்கோவே
சலமா நோவெனுங் கலிதனி லமிழ்ந்தோன்
றலைவா காவென் றொலித்தாலே
நிலமீ தாதாரித் தணைத்தருள் பு¡ரியா
தவனோ நீவந் தருளாயே. .. 8
செப்பேர் மாதனக் கலைமக டுதிசெய்
திருவே தேரே மயமூர்த்தீ
எப்போ தும்பெருந் தகையுடை யிளையோ
யெளியே னாடு மிறையோனே
தப்பா நோவெனுங் கலிதனி லமிழ்ந்தோன்
றலைவா காவென் றொலித்தாலே
அப்பா வாவென வெடுத்தருள் புரியா
தவனோ நீவந் தருளாயே. .. 9
குமரா நீடொளி யருணையின் பெயரோன்
குருவே கோவே கூர்த்தவயில்
அமலா பாதக மடுசிவ மணியே
யடியேன் பாவிற் குரியோனே
தமமா நோவெனுங் கலிதனி லமிழ்தோன்
றலைவா காவென் றொலித்தாலே
எமனீ வாவென வெடுத்தருள் புரியா
தவனோ நீவந் தருளாயே. .. 10

Pamban Swamigal Tiruppaliezhuchi Trust Document (Reg no: 98/2024)