நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்
இரண்டாம் மண்டலம் இசை
முதற்கண்டம் இசை
| வரி எண் | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
|---|---|---|---|
| 44. | துயரறுக்கு மார்க்க விளக்கம் | 10 | |
| பலன் | அடியாரை வணங்கினால் ஆண்டவன் அருள் அல்லது ஞானியின் அருள் கிடைக்கும் வழி தெரிய வேண்டுமா?
|
||
துயரறுக்கு மார்க்க விளக்கம்
பாடல் - துயரறுக்கு மார்க்க விளக்கம்
பண் - நட்டராகம்
தேவாரப்பண் - பொன்னார் மேனியனே
இராகம் - பந்துகவராளி
தாளம் - ரூபகம்
மணிம தாணி மார்பினர் மாசில் பரசுப் படையினர்
திணிம யூர வாகனர் சீத மேய நீபவீ
அணிவி சாகர் சேவடி யடைவ தேமெய் வீடெனாப்
பணிவி வேகர் தூவடி பரவச் சூர்கள் பாறுமே. .. 1
நாத கீதப் பிரியர்மெய்ஞ் ஞான யோகத் திருவினர்
பூத நாதர் பொருவிலாப் பூதி திமிரு மேனியர்
வேத நீதர் வேய்ங்குழ லூது வாயர் வேலவர்
பாத நாடு வோரடி பரவச் சூர்கள் பாறுமே. .. 2
எண்ணு வார்க ணெஞ்சுணர்ந் தருளு மீடி லிருதய
அண்ண லேயென் றேத்துநர்க் கைய ராகு முருகவேள்
கண்ணி னாட்ட நிமிரவே கருதி ஞான யோகமே
பண்ணு வோர்கள் பதமலர் பரவச் சூர்கள் பாறுமே. .. .. 3
ஈச னேசு ரேசனே யெனுநர்க் கின்பு பொழியவே
மூசு கருணை மேகமா முதல னாதி முருகவேள்
தாச ராயிவ் வுலகிலே சார்பி லாது திரிதரு
பாச நாசர் பதமலர் பரவச் சூர்கள் பாறுமே. .. 4
சீல யோகர் செல்வமாஞ் செல்வம் யாவு நல்கருட்
கோல மேநன் மேனியாக் கொண்டு லாவு குமரவேள்
காலை நம்பி விடயவெங் கனலி யாற்றின் மேன்மயிர்ப்
பால ஞான நிற்குநர் பரவச் சூர்கள் பாறுமே. .. 5
தீங்கு றாத சேடுடைச் செந்தி னாத ரருள்கொடு
வீங்க லின்றி வீங்கிடும் விமல யோக நிலையிலே
ஓங்கு சின்முத் திரையினா லொன்றி ரண்டெ னாதநல்
பாங்கி னோர்தம் பதமலர் பரவச் சூர்கள் பாறுமே. .. 6
அந்த மாதி நடுவிலா வமல ஞான மயசிவா
நந்த சரவ ணபவவே ணாம மந்த்ர மோதியே
கந்த மாதி யைந்தையுங் கடியும் வன்மை யொடுநெடும்
பந்த நீத்து ளோர்பதம் பரவச் சூர்கள் பாறுமே. .. 7
சடில நாத ராஞ்சிவ சம்பு நன்கு நவின்றவா
நெடிய வேலி னிறைவரை நிமல னாநி னைந்துமா
கொடிய நெஞ்சை யொருமுகங் கூட்டி நினைவு கூர்ந்துகோட்
படிற கன்று ளோர்பதம் பரவச் சூர்கள் பாறுமே.; .. .. 8
சுகுர்த ஞான தேசிகா சூர நாச காமகா
சிகியி ராச வோஞ்சிவ சிவசி வசிவ சிவசிவோம்
குககு ககுக ரர குமர குருப ரவெனவே
பகரு மன்பர் பதமலர் பரவச் சூர்கள் பாறுமே. .. 9
தீஞ்சொ லருண கிரிசதா சிந்தை செய்ச டானனா
ஓஞ்ச ரவண பவநம வோஞ்சி வாய நமகுகா
ஓஞ்ச ரவண குருபரா வோந மோந மவெனுமின்
பாஞ்சு சீலர் பதமலர் பரவச் சூர்கள் பாறுமே. .. 10

Pamban Swamigal Tiruppaliezhuchi Trust Document (Reg no: 98/2024)