பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கணிணி மற்றும் இணைய தளம் மூலம் தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் உடனடியாக தேவைப்படுகின்றது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

ஆங்கிலம் தமிழ்

Recording of Srimath Pamban Swamigal Guru Pooja telecasted on 4th June 2018, 4.00 PM to 7 PM.


பரிகாரங்கள் செய்வதைவிட அருளாளர்கள் அருளிய பதிகங்கள்
ஓதி அல்லது பாடி நம் வினையை தீர்த்துக் கொள்ளலாம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்

இரண்டாம் மண்டலம் இசை

முதற்கண்டம் இசை


வரி எண் பதிகம் பெயர் மற்றும் நன்மை மொத்தம் பாடல்கள் திரும்பி போக
58. திருக்கந்தர் திருப்பலாண்டு 10
பலன்திருத்தல தரிசனம் பெறவும், நல் வாழ்வு பெறவும், சகல நன்மைகளும் அடையவும், நீண்ட ஆயுள் பெற வேண்டுமா?
மேலும் பலன்கள் அறிய - இனிய வாழ்விற்கு வழி

திருக்கந்தர் திருப்பலாண்டு

  பாடல் - திருக்கந்தர் திருப்பலாண்டு (அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

பண் - பஞ்சமம்
தேவாரப்பண் - தானெனை முன் படைத்தான்
இராகம் - ஆகிரி
தாளம் - ரூபகம்

பொன்னுயர் நாட்டிறை புத்திரி தனைமன்றல் புரிந்துசெந் தினைகாத்த
மின்னினை மாமணஞ் செய்தரு ணாடிய வித்தகர் தமையாண்டு
நன்னல நல்கருள் வேந்தென விளங்குபு நான்மறை களும்விரித்துப்
பன்னரும் பரமென விருக்குநந் தேவுக்குப் பல்லாண்டு கூறுதுமே. ..  1

மூப்பறு கட்டிள மைத்திரு மேனியு மூப்புடை யார்க்கெல்லாம்
மூப்புடை மேன்மையு மூப்புடை யாவிகண் முழுவது மூப்பிளமை
யாப்பறு மாறெமை யாள்கும ராவென நாடிறை மையுமல்கு
பாப்பணை யான்மரு மானெனும் வேலற்குப் பல்லாண்டு கூறுதுமே.  ..  2

நீர்வள மார்பரங் குன்றிலு நீடெழி னிமிர்திருச் செந்திலிலும்
சீர்வள மார்திரு வேரகந் தன்னிலுந் தீதறு பழநியிலும்
ஏர்வள மார்திருச் சோலையங் கிரியிலு மிருந்தடி நினைவார்க்குப்
பார்வள மேல்வள நல்கருட் குகனுக்குப் பல்லாண்டு கூறுதுமே.  ..  3

தணிகைகந் தாசலஞ் சமரா புரிதிருச் சயிலமி லஞ்சியறா
அணிகெழு வேள்வியங் கிரிபொதி யாசல மாரிப்பா டுடுப்பைமகா
திணியகத் தேவைசெங் கோடுகுன் றக்குடி திருவுரு மலையாரூர்
பணியுயர் கூடலம் பதியுறை குகனுக்குப் பல்லாண்டு கூறுதுமே.  ..  4

சித்தர்கள் காண்கதிர் காமமண் ணாமலை சீசயி லங்கயிலை
எத்தவ ரும்புகழ் மேரு சிராசல மேர்த்திரு நீற்றுமலை
உத்தம நீள்கழு கோதியெண் கண்ணெனு மொண்டலங் களின்மேவிப்
பத்தருக் கருள்புரி கின்றசெவ் வேளுக்குப் பல்லாண்டு கூறுதுமே. ..  5

நேசர்கள் வாழெழின் மயிலவொண் மாதிர நீர்மலி பெரும்பேறு
கோசரர் சூழ்கந்த கோட்டங் குமாரவொண் கோட்ட நல் வேற்காடு
மாசில்கு மாரபு ரம்பெரு வயலிரு கொடுமளூர் வதிந்தடியார்
பாசறை தீர்த்தருள் பு¡ரிமுரு கோனுக்குப் பல்லாண்டு கூறுதுமே. ..  6

துப்புறு பூண்டிபுள் வேணகர் வேனகர் தூயவர் புகழாண்டார்
குப்பமி றாதபொ னம்பல மெனவே குயினில யங்களிலும்
ஒப்பக நாடுகள் காடுகள் கீழ்மே லுலகுயிர்த் திரள்களிலும்
பப்புவர் மீக்கூ றிடநிறை குகனுக்குப் பல்லாண்டு கூறுதுமே.  ..  7

கட்சியி லேபடுத் துயில் கொண்டிருட் காரியி னுங்கொடிய
அட்சிகண் மோகன மாழ்ந்துள வாயுளை யவம்பணி யவியாமல்
வெட்சியுங் கோடையு மணிதிரு மொய்ம்புகள் விளங்கிட மென்றூவிப்
பட்சியில் வருமுரு கோனெனு மாதிக்குப் பல்லாண்டு கூறுதுமே. ..  8

எண்ணுந ரெண்ணம தோர்ந்தரு ளேந்தலு மிரவொடு பகலிறந்த
கண்ணர்கள் பின்றொடர் காதலுள் ளானுமொர் காலமு மிடர்நாசம்
நண்ணுத லில்லுயர் பெருந்திற லோனுமெஞ் ஞாலமு நினைவொன்றால்
பண்ணிடு மீசனு மாயுள்ள குகனுக்குப் பல்லாண்டு கூறுதுமே.  ..  9

அன்னையின் மேம்படு கருணையி னாற்குக னடிகளைப் புகழ்தாசன்
தன்னைமெய் யடியவ னாக்கவென் றகம்புறஞ் சார்ந்துவந் தேற்றமதி
சொன்னவ னாயனு பூதிசொன் னவற்குறு சூரறுத் தெவராலும்
பன்னாவொ ணாநல நல்கிய குகனுக்குப் பல்லாண்டு கூறுதுமே. ..  10

கலியுகம் 5002 சார்வரி (1900) புரட்டாதி மாதம் 18ஆம் தேதி விஜயதசமி புதவாரம்