நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்
இரண்டாம் மண்டலம் இசை
முதற்கண்டம் இசை
| வரி எண் | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
|---|---|---|---|
| 5. | துக்கரகித பிரார்த்தனை | 10 | |
| பலன் | உங்களுடைய துயரம் எதுவாக இருந்தாலும் அத்துயரத்தில் இருந்து நீங்கள் விடுபட வேண்டுமா?
|
||
துக்கரகித பிரார்த்தனை
பாடல் - துக்கரகித பிரார்த்தனை
பண் - பழம்பஞ்சுரம்
தேவாரப் பாடல் - முத்தா முத்தி தரவல்ல
இராகம் - சங்கராபரணம்
தாளம் - ரூபகம்
முந்நா னயனா முந்நா லாரியா மொழிசேர் மறைநாவா
இன்னா வணுகா விறைவா குரவா விறையோர் பணிபாதா
மன்னார் மயிலில் வருமா பாலா மடியா வாழ்வாளா
அன்னே யயனே யெனுமென் கவலை யறநீ யருள்வாயே .. 1
ஒழியா விசதப் பொடியாய் பொடியா வுரையார் பொற்கழலாய்
பழிசேர் சிதடத் தனுவோர் பகைஞா பகல்சேர் வேற்கையா
பொழிலார் பழநிப் பதியாய் நிதியாய்புனிதா மாப்பொறையா
அழியா மொழியா வென்றன் கவலை யறநீ யருள்வாயே .. 2
சொல்லுஞ் சுருதிப் பொருளே யருளே சுடர்சேர் மெய்ம்மெய்யா
செல்வங் கட்குயர் செல்வக் கயிலைச் சிவமே செவ்வேளே
நல்லந் திகழுங் கேதா ரமிசை நடனஞ் செய்யேறே
அல்லும் பகலும் படுமென் கவலை யறநீ யருள்வாயே .. 3
மாலும் விதியும் பரவுஞ் சரணா வளர்சங் கப்புலவா
வேலுங் குளிரு மிளிர்செங் கையா விரையா ரணிமார்பா
சேலும் வசியு நாணுங் கணினாள் சேயா தண்ணளியா
ஆலுந் தளையா வென்றன் கவலை யறநீ யருள்வாயே .. 4
முத்தே மணியே முழுமா நிதியே முதிரா யெளவனமே
சத்தே ரசமே தனியின் னமுதே தவமே தவப்பேறே
வித்தே முளையே முளையுள் ளுயிரே விபுவாய் விரிசோதீ
அத்தா வயில்வே லவனே கவலை யறநீ யருள்வாயே .. 5
தாதா நீபத் தொடரா குமரா சரணா யுததுவசா
போதார் முடியா புனிதா தனியா புயமுந் நாலீசா
வேதா வடிதாழ் விமலா சபலா மிறலார் வேளாளா
ஆதா ரவையா வென்றன் கவலை யறநீ யருள்வாயே .. 6
புனலார் கங்கைக் கிடையோர் புதல்வா பொன்னார் கண்ணாளா
எனையா டண்டைச் சரணா புரணா விகல்சேர் சகநாதா
தினைசேர் குன்றக் குறமா னினியைச் சேரும் பவுள்சரளா
அனலார் மெய்யா வென்றன் கவலை யறநீ யருள்வாயே .. 7
முட்டா வாட்டா மொழியா நாத்தே முடியாச் சிவலோகா
கட்டா ரறிஞா கருதா மனசா கருணா கரவேலா
எட்டா நிலையா விறையோர் தலைவா விருளெல் லில்லாதோய்
அட்டா வடிவா வென்றன் கவலை யறநீ யருள்வாயே .. 8
எஞ்சா வடியார் தொடர்பா வடல்சே ரிறைவா சட்கிரீவா
துஞ்சா வெழிற்கே கயமூர் குழகா சுகுர்தா சுயஞ்சோதீ
பஞ்சா ரடிச்சேல் விழியா டனயா பரிபூ ரணபாதா
அஞ்சா விறலோ யென்றன் கவலை யறநீ யருள்வாயே .. 9
விண்ணா டுறைநா ரதனா சிரியா வியன்வா ருணியீசா
மண்ணார் முசுமன் னனையாள் சிவனே மதியீ புண்ணியனே
பண்ணார் புகழ்பா டினவன் பதியே பரனார் குருநாதா
அண்ணா வடிபே ணியவென் கவலை யறநீ யருள்வாயே
..10

Pamban Swamigal Tiruppaliezhuchi Trust Document (Reg no: 98/2024)