நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்
இரண்டாம் மண்டலம்
முதற்கண்டம் இசை
| வரி எண் | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
|---|---|---|---|
| 8. | திருப்பரங்கிரி | 10 | |
| பலன் | முருகனுக்கு அடிமையாக தன்னை மாற்றிக் கொண்டால் நமக்கு என்ன நன்மை?
|
||
திருப்பரங்கிரி
'பாம்பன்'
ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய
திருவலங்க திரட்டு
- முதற்கண்டம்* -
இசைத்தமிழ் (இரண்டாம் மண்டலம்)
பாடல் - திருப்பரங்கிரி
பாடல் - திருப்பரங்கிரி
பண் - பஞ்சமம்
தேவாரப் பாடல் - தானெனை முன்படைத்தான்
இராகம் - ஆகிரி
தாளம் - ரூபகம்
எந்தையே யிறையே யிணையரு ளிலையே
லிங்கியா னுய்ந்திலே னந்தோ
சிந்தைசேர் வானே திகழ்விழுப் பொருளே
திருப்பரங் கிரியுறை சிவனே
பந்தமே போக்கிப் பதவரு ளாக்கிப்
பகலிர வணவிடா நிலையிற்
சந்ததஞ் சேர்க்கத் தயவுசெய் யாயோ
சரவண சுயம்பெரு மாளே .. 1
ஏசுறா வருளா மிதநல மிலையே
லிங்கியா னுய்ந்திலே னந்தோ
தேசுசே ரெழிலே திகழ்விழுப் பொருளே
திருப்பரங் கிரியுறை சிவனே
பாசமே போக்கிப் பதவரு ளாக்கிப்
பரபரி பூரண நிலையில்
நேசமாய் நிலைக்கச் செயும்வகை புரியாய்
நிகழயிற் சுயம்பெரு மாளே .. 2
இன்றுநா ளையெனலி லாவருளிலையே
லிங்கியா னுய்ந்திலே னந்தோ
சென்றுதே யாவை திகழ்விழுப் பொருளே
திருப்பரங் கிரியுறை சிவனே
அன்றுநீ சொனவா றடிமையை யழைத்துன்
னடித்தொழும் பாயுறும் வேலை
ஒன்றையே விதிப்பா யயிற்படை பிடித்தே
யொளிர்சுப சுயம்பொரு மாளே .. 3
எங்கணா யகநீ யிடுமரு ளிலையே
லிங்கியா னுய்ந்திலே னந்தோ
திங்களா னனனே திகழ்விழுப் பொருளே
திருப்பரங் கிரியுறை சிவனே
கங்குல்போ லுளவா ணவமல மறவே
கருணைசெய் தேயெனை யாளாய்
அங்கணா புரணா வணியலர்ச் சரணா
வயிலுடைச் சுயம்பெரு மாளே .. 4
இசையியல் கூத்தென் றுளதமிழ் நாதா
விங்கியா னுய்ந்திலே னந்தோ
திசைப்புக ழாதீ திகழ்விழுப் பொருளே
திருப்பரங் கிரியுறை சிவனே
வசைதரு மாமும் மலமற நீதான்
வருவது கடினமெ னாதே
உசிதமொ டுதடுத் தாள்வது கடன்கா
ணுயரயிற் சுயம்பெரு மாளே .. 5
இச்சையான் மறற்கே றடிமையென் றானா
லிங்கியா னுய்ந்திலே னந்தோ
செச்சைசேர் பிணையாய் திகழ்விழுப் பொருளே
திருப்பரங் கிரியுறை சிவனே
பட்சமே யுரித்தாய் பழமல மகற்றிப்
பகரரு மானந்த நிலையில்
நிச்சயா திக்கமா நிறுத்தவா ராயோ
நெடுமயிற் சுயம்பெரு மாளே .. 6
என்னையாள் வானே யேரரு ளிலையே
லிங்கியா னுய்ந்திலே னந்தோ
தென்னர்மா கூற்றே திகழ்விழுப் பொருளே
திருப்பரங் கிரியுறை சிவனே
இன்னலா மைவகைப் பாசவல் லொழித்துன்
னிணையடி யென்முடி சூட்டி
நன்னலங் கொளற்குப் பன்னவா ராயோ
நறுமயிற் சுயம்பெரு மாளே .. 7
எம்பிரா னேயுன் னன்பனாக் காயே
லிங்கியா னுய்ந்திலே னந்தோ
செம்பொருட் கடலே திகழ்விழுப் பொருளே
திருப்பரங் கிரியுறை சிவனே
நம்பினே னுனையே நைந்தறா மாயை
நலிவுறத் தடுத்தா ளாயோ
உம்பர்கா வலனே யுமையவள் சுதனே
யுணர்வயிற் சுயம்பெருமாளே .. 8
இஞ்சையா ணவப்பாம் பின்னமுங் கறிக்கி
னிங்கியா னுய்ந்திலே னந்தோ
செஞ்சடா னனனே திகழ்விழுப் பொருளே
திருப்பரங் கிரியுறை சிவனே
அஞ்சிடா யெனவே யாதா¢த் தணைத்துன்
னடித்தொழும் பாக்கவா ராயோ
மஞ்சுவாழ் கயப்பெண் மயன்மண வாளா
வடிவயிற் சுயம்பெரு மாளே .. 9
இட்டமா மருடா னில்லையே யாயி
னிங்கியா னுய்ந்திலே னந்தோ
சிட்டர்பா லனனே திகழ்விழுப் பொருளே
திருப்பரங் கிரியுறை சிவனே
கட்டுமா ணவமாங் கயிற்றனை யறுத்தென்
கவலையின் றிறங்கடி யாயோ
மட்டிலா வகுப்பை யுரைத்தவ னிறைவா
மதியயிற் சுயம்பெரு மாளே .. 10

Pamban Swamigal Tiruppaliezhuchi Trust Document (Reg no: 98/2024)