பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கணிணி மற்றும் இணைய தளம் மூலம் தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் உடனடியாக தேவைப்படுகின்றது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

ஆங்கிலம் தமிழ்

Recording of Srimath Pamban Swamigal Guru Pooja telecasted on 4th June 2018, 4.00 PM to 7 PM.


பரிகாரங்கள் செய்வதைவிட அருளாளர்கள் அருளிய பதிகங்கள்
ஓதி அல்லது பாடி நம் வினையை தீர்த்துக் கொள்ளலாம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »ஆறாவது மண்டலம் பாடல்கள்

ஆறாவது மண்டலம் பாடல்கள்


வரி எண். பதிகம் பெயர் மற்றும் நன்மை மொத்தம் பாடல்கள் திரும்பி போக
27 ஆனந்தகளிப்பு
பலன்சிவயோக ஞானத்தின் மூலம் முக்தி பெற வேண்டுமா?
மேலும் பலன்கள் அறிய - இனிய வாழ்விற்கு வழி

ஆனந்தகளிப்பு

ஆனந்த மேகுக பிரமம் - சச்சி
தானந்த ஞான சதானந்த பிரமம்

குகபிரமம் ஆனது, ஆனந்த சொரூபமும் சச்சிதானந்த சொரூபமும் ஞான சொரூபமும் சதானந்த சொரூபமும் உடையதாகும்.

எந்தை யவனருள் கொண்டே - யுனக்
கெடுத்துச்சொல் வேன்செவி கொடுத்துக்கேண் ஞேயா
சிந்தைகெட் டுத்துயி லுங்கால் - செலல்
செப்பி னெழுபதோ டைந்தங் குலங்காண். (ஆனந்த)            1.

மாதர்சை யோகத்தி னாற்பத் - தெட்டும்
மருவிய முக்காலு மாம்விரைந் தோடும்
போதிரு பத்தைந் தரையாம் - சென்று
போம்போது தான்பதி னெட்டாகு ஞேயா. (ஆனந்த)        2

உண்ணும் பொழுது மொலிக்க - மொழி
யுரைக்கும் பொழுதும் பதின்மூன் றரையாம்
நண்ணிய சாதார ணத்தி - லிரு
நான்குட னொன்றா நலிவது ஞேயா. (ஆனந்த)        3

ஒன்பதி லேவிட யந்தா - னில்லா
தொடுங்கிடி னெட்டேகா லாமே ழரைக்கே
இன்பச் சமாதிதான் கூடி - நன்றா
யிருக்கலா மற்றப் படிக்கில்லை ஞேயா. (ஆனந்த)        4

ஏழரை தன்னிலே முக்கால் - குன்று
மேனற் கடாக்ஷவாக் குண்டாகு மாறில்
ஊழொடு முக்காலந் தோன்று - மதி
லோர்முக்கால் குன்றின்மெய்ஞ் ஞானக்கண் காணும். (ஆனந்த)        5

நாலரை தன்னிலா காய - கம
னந்தனக் குண்டா மதின்முக்கால் குன்றின்
கோலப் பதினான் குலகும் - நிமை
கொட்டு மளவிலே சுற்றி வரலாம். (ஆனந்த)        6

மூன்றிலே யட்டமா சித்தி - கூடு
முக்கா லடங்கிடி னவநிதி செய்ய
ஆன்றவல் லாண்மையுண் டாமொன் - றரைக்
கான்மாவைக் காணலா மன்புள்ள ஞேயா. (ஆனந்த)        7

முக்காலி லீசுர வமிச - மாகி
முன்பினுந் தன்னிழல் காணாம னிகழும்
முக்காலு மற்ற விடத்தே - பர
முத்தி யெனும்பெரு வாழ்வாகு ஞேயா. (ஆனந்த)        8

இந்தத் திதியிற் புசிப்பும் - நீரு
மிதமான காற்று மனாவசி யஞ்சேர்
எந்த வியாதியுஞ் சாவு - மில்லை
யெழிலான தேசுனல் வாசமு முண்டாம். (ஆனந்த)        9

இந்தவி தம்பர மேசன் - சொற்றா
னென்றுநீ தேரிதின் மூச்சைப் பிடித்துப்
பந்திப்ப தில்லை மனத்தை - யுள்ளே
பந்திக்கத் தானே யடங்குமம் மூச்சு. (ஆனந்த)        10

மாற்றஞ்செய் வன்மனக் கல்லைப் - பத்தி
மார்க்க குகைதனில் வைத்தே யுருக்கி
ஊற்று குகன்பதந் தன்னி - லந்த
வுத்தம மான மனோலய மெய்தும். (ஆனந்த)        11

வீட்டுக் குடையவ னீயே - யந்த
வீட்டிற் சுகிக்கவிவ் வீட்டைநம் பாதே
ஊட்டு மறுசுவை போக்கிச் - சிவ
னூட்டு முருசியை யுட்கொண்டு தேக்கு. (ஆனந்த)        12

தோன்றிடு தூக்கமுந் தள்ளிக் - கெட்ட
சோம்பலுந் தள்ளிச் சுகமெல்லாந் தள்ளி
ஊன்றிய யோகத்தி னில்லங் - கேநின்
றுண்டாகு மானந்த மெல்லாநீ கொள்ளே. (ஆனந்த)        13

கொண்ட தவத்திலே நின்றுன் - னெரி
கொண்ட பசிக்கெதிர் வாய்த்ததை யுண்டவ்
வண்ட வெளியிலே சென்று - கண்ட
வற்புத மெல்லா மடக்கஞ்செய் துய்யே. (ஆனந்த)        14

சீர்மலி யானந்த வீட்டின் - பத்தைச்
சேர்ந்த வண்ணாமலைப் பேரெந்தை யீசன்
கூர்வடி வேலுடை யைய - னென்னுட்
குடிகொண்ட வொருவன்ற னடியென்றும் வாழி.(ஆனந்த)        15